புதுடெல்லி, 20-வது ஆசிய விளையாட்டு போட்டி அடுத்த மாதம் (செப்டம்பர்) 19-ந்தேதி முதல் அக்டோபர் 4-ந்தேதி வரை ஜப்பா னின் அய்ச்சி மற்றும் நகோயாவில் நடக்கிறது. இந்த போட்டிக்கு இந்தியா 492 பேர் கொண்ட குழுவை அனுப்புகிறது. மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு பிறகு அணி பட்டியல் வெளியிடப்பட்டது. அதிகபட்சமாக தடகளத் தில் நீரஜ் சோப்ரா, பிரவீன் சித்ரவேல் உள்பட 73 பேர் இடம் பிடித்துள்ளனர். இந்த நிலையில் திறமையான சில வீரர், வீராங்கனைகள் பெயர் விடுபட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. டென்னிசை பொறுத்தவரை தரவரிசையில் ஆசிய அளவில் டாப்-8 இடங்களில் உள்ளவர்களுக்கு மட்டுமே இடம் பெற முடியும் என விளையாட்டு அமைச்சகம் வழிகாட்டுதல் நெறிமுறைகளை வழிவகுத்துள்ளது. இதன் விளைவாக மானஸ் தம்னே, வைஷ்ணவி அட்கர், சஹஜா யமலபள்ளி, வைதேகி சவுத்ரி, பிரார்த்தனா தோம்பரே உள்ளிட்ட வளரும் நட்சத்திரங்க ளுக்கு இடம் கிடைக்காமல் போய் விட்டது. இந்த விதிமுறையானது விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என இந்திய முன்னாள் டென்னிஸ் வீரர் ரோகன் போபண்ணா கவலை தெரிவித்தார். 'முடிவுகள் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுவிட்டன என்றால், தகுதி சுற்று எதற்கு? தரவரிசை பட்டியல் எதற்கு? இவர்களிடம் நீங் கள் பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளவர்கள் அல்ல என கூறுவது. அவர்களின் பெற்றோர் மற்றும் ஸ்பான்சர்கள் ஒவ்வொரு வரிடமும் இங்கே உங்கள் கணிப்புக்கு எந்த மதிப்பும் இல்லை என சொல்வது போன்றதாகும்' என அவர் விமர்சித்திருந்தார். இது குறித்து மத்திய விளையாட்டு அமைச்சக வட்டாரங்கள் நேற்று கூறுகையில், 'அணியை இறுதி செய்வதில் எங்க ளுக்கு நிறைய நெருக்கடி இருந்தது. சில பெற்றோர் வந்து தங்கள் குழந்தைகளை தேர்வு செய்யவில்லை என கூறினர். அதற்கு நாங்கள், உங்கள் பிள்ளைகள் தேர்வுக்கு தகுதியானவர்களாக இருந்தால் (அதாவது தேர்வுக்கான விதிமு றையை பூர்த்தி செய்திருந்தால்) அவர்களது பெயர் விடுபடுவதற்கு வாய்ப்பே இல்லை என்று சொன்னோம். ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை பெற 10 வினா டிகளில் ஓட வேண்டிய நிலையில், 15 வினாடியில் ஓடும் வீரரை நாம் அனுப்பினால் சரியாக இருக்குமா? அதனால் தான் தடகளத்தில் ஆசிய அளவில் டாப்-6 இடங்களுக்குள் இருப்பவர்களை மட்டுமே தேர்ந்தெடுப்பது என்றும் இல்லா விட்டால் அவர்களை தேர்வு செய்வதில்லை என்றும் அளவுகோல் நிர்ணயித்து அதை பின்பற்றி வருகிறோம். இந்த விதிமுறைகள் ஓராண்டுக்கு முன்பே அறிவிக்கப்பட்டு விட்டது. அவற்றை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப தங்களை தயார்படுத்திக்கொள்ள போதிய அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. மற்றபடி விதிமுறையில் தளர்வு செய்யும் பேச்சுக்கே இடமில்லை' என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/sports/othersports/selection-of-asian-games-athletes-union-sports-ministry-refuses-to-relax-norms




