விசாகப்பட்டினம், ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள தாடேரு கிராமத்தைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் அனந்தவாணி (வயது32). இவர் மாற்றுத்திறனாளி தந்தை மற்றும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தாயை பராமரிக்க, வீட்டில் இருந்தே பணியாற்றி வந்தார். பெற்றோரை கவனிப்பதற்காக திருமணத்தையும் தள்ளிப்போட்டு வந்துள்ளார். இந்நிலையில், அவருக்கும் சியாம் பாபு என்ற ஆட்டோ டிரைவருக்கும் காதல் மலர்ந்தது. ஆனால், சியாம் பாபுவிற்கு ஏற்கனவே திருமணமாகி இரு குழந்தைகள் இருப்பதை அறிந்த அனந்தவாணி, அவருடனான தொடர்பை துண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த சியாம் பாபு, சம்பவத்தன்று இரவு அனந்தவாணியின் வீட்டிற்குள் புகுந்து அவரை கத்தியால் சரமாரியாகக் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவான சியாம் பாபுவை வலைவீசி தேடி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/female-engineer-murdered-after-ending-relationship-lovers-brutal-act




