மைசூரு, கர்நாடக வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து, மைசூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வாலிபர் மகிமைதாசன், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வனத்துறை துப்பாக்கிச்சூடு கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடகா மற்றும் தமிழக எல்லை பகுதியில் வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மகிமைதாசன் என்ற வாலிபர் குண்டு பாய்ந்து படுகாயமடைந்தார். இதைத்தொடர்ந்து அவர் கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். கைது செய்ய முயற்சி இந்நிலையில், மருத்துவமனை படுக்கையில் இருந்தவாறே மகிமைதாசன் ஒரு பரபரப்பு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:"துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து நான் இன்னும் முழுமையாக குணமடையாத நிலையில், கர்நாடக வனத்துறையினர் என்னை வலுக்கட்டாயமாக கைது செய்ய துடிக்கிறார்கள். இதற்காக என்னை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யும்படி அங்கிருக்கும் மருத்துவர்களையும், அதிகாரிகளையும் வனத்துறையினர் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார்கள். உயிருக்கு ஆபத்து மேலும், "இந்த துப்பாக்கிச்சூடு வழக்கின் மிக முக்கிய சாட்சியாக நான் இருக்கிறேன். இதனால், என்னை எப்படியாவது சிறையில் அடைக்க வனத்துறை திட்டமிடுகிறது. மருத்துவமனையை விட்டு வெளியேறினால் எனது உயிருக்குக் கடுமையான ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்" என்று அவர் அந்த வீடியோவில் கண்ணீருடன் உருக்கமாக பேசியுள்ளார். வனத்துறை துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த வாலிபர், தப்பியோட முயன்றதாக வனத்துறை கூறும் நிலையில், சாட்சியத்தை அழிக்க தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக வாலிபர் குற்றம் சாட்டியிருப்பது இந்த வழக்கில் மேலும் பெரும் பரபரப்பையும், திருப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/man-injured-in-karnataka-forest-shooting-alleges-life-threat




