விருதுநகரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது,``அ.தி.மு.க-விலிருந்து முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் பலர் தவெக-வில் இணைந்து வருகிறார்கள். விஜய் முதலமைச்சராக வேண்டும் என்பதற்காகத் தேர்தலில் உழைக்காத இவர்கள், கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பிறகு பதவிக்காகவும் ஆதாயத்திற்காகவும் அங்குச் செல்வது அப்பட்டமான சந்தர்ப்பவாதம். தன்னை உருவாக்கி, 10 ஆண்டுகள் அமைச்சராகவும் 15 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராகவும் அழகு பார்த்த சொந்த இயக்கத்தையே தூக்கி எறிந்தவர்கள், நாளை த.வெ.க-வையும் தூக்கி எறிய அதிக காலம் ஆகாது. முதல்வர் விஜய் தவெக தன் ரசிகர்களின், நிர்வாகிகளின் உழைப்பில் வளர்ந்த கட்சி. வெற்றிக்குப் பிறகு வந்து சேருபவர்களால் எந்த பலனும் இல்லை. இதைக் கட்சித் தலைவர் விஜய்யும் த.வெ.க நிர்வாகிகளும்தான் புரிந்து கொண்டு விழிப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். மரம் செழித்து வளர்வது போல அதிமுக எப்போதும் வளர்ந்து கொண்டேதான் இருக்கும். பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க மிகவும் பலமான இயக்கமாகத் தொடர்ந்து இயங்கி வருகிறது. திரையரங்கில் விஜய் படத்தைப் பார்த்து அமைச்சர்கள் சிலர் அழுதது, மக்களால் மிகைப்படுத்தப்பட்ட ஒரு நாடகமாகவே பார்க்கப்படுகிறது. நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களின் தொடர் போராட்டத்தால் மத்திய அரசு அடிபணியவில்லை. மாறாக, மாணவர் சமுதாயம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவும், பிரச்னையின் நியாயத்தைப் புரிந்து கொண்டு அதற்கான சரியான தீர்வை எட்ட வேண்டும் என்ற நோக்கத்திலும்தான் மத்திய அரசும் அமைச்சரும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்," என்று கூறியுள்ளார். கரப்பான் பூச்சி: ``என் பேச்சு தவறாகத் திரிக்கப்பட்டுவிட்டது" - தலைமை நீதிபதி சூர்யா காந்த் விளக்கம் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/government-and-politics/rajendra-balaji-speaks-about-the-ministers-resignation




