சென்னை, மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான துல்கர் சல்மான், மம்முட்டியின் மகன் என்ற அடையாளத்தைத் தாண்டி தனது நடிப்பு மற்றும் வித்தியாசமான கதைத்தேர்வுகளால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். 'வாயை மூடி பேசவும்', 'ஓகே கண்மணி' படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்த அவரது நடிப்பில் வெளியான 'லக்கி பாஸ்கர்' திரைப்படத்தின் மூலம் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்தார். அடுத்தடுத்த படங்களில் பிஸி தற்போது துல்கர் சல்மான், 'ஐயம் கேம்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும், இயக்குநர் பவன் சதினேனி இயக்கத்தில் உருவாகும் நேரடி தெலுங்கு திரைப்படமான 'ஆகாசம்லோ ஒக தாரா' படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இறுதிக்கட்டத்தில் 41-வது படம் இதற்கிடையில், இயக்குநர் ரவி நெலகுதிதி இயக்கத்தில் உருவாகி வரும் துல்கர் சல்மானின் 41-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க, ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். ஸ்ரீ லட்சுமி வெங்கடேஷ்வரா சினிமாஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. இந்தப் படத்திற்கு 'ஸ்ரீ ஸ்ரீ' என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இந்த நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'பொம்மா பொம்மா' என்ற பாடல் வருகிற ஜூலை 27 ஆம் தேதி மாலை 5.04 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/cinema/cinemanews/update-on-the-first-single-from-the-dulquer-salmaan-starrer-sri-sri




