லண்டன், இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து பிரெண்டன் மெக்கல்லம் விலகியுள்ள நிலையில், அவருக்குப் பதிலாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் தலைமைப் பயிற்சியாளரான ஆண்டி பிளவரை நியமிக்க இங்கிலாந்து தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து ஆர்வம் ஆண்டி பிளவர் தலைமையில் ஆர்சிபி அணி சிறப்பாக செயல்பட்டு அடுத்தடுத்த ஐபிஎல் கோப்பைகளை வென்றது. இதனால் அவரை இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்க இங்கிலாந்து நிர்வாகம் ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. நம்பர்-1 அணி ஆண்டி பிளவர் ஏற்கனவே 2007 முதல் 2014 வரை இங்கிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அவரது தலைமையில் இங்கிலாந்து அணி ஆஷஸ் தொடரை வென்றதுடன், 2010-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையையும் கைப்பற்றியது. மேலும், டெஸ்ட் தரவரிசையில் உலகின் நம்பர்-1 அணியாகவும் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/sports/cricket/england-going-all-out-to-scoop-rcb-head-coach-as-brendon-mccullums-replacement




