சட்டமன்றத்துக்கு வெளியே முன்னாள் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``சட்டமன்றத்தில் இன்று திமுக உறுப்பினர் கோவி.செழியன் பேசும்போது, திமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டில் அனைத்து நிகழ்ச்சிகளிலும் முதலாவதாகத் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும் என்பதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டு, அது நடைமுறைப்படுத்தப்பட்டதைச் சுட்டிக்காட்டினார். இருப்பினும், வெறும் அரசுத் தீர்மானம் என்பது ஆளுநரையோ அல்லது பிற அதிகார அமைப்புகளையோ முழுமையாகக் கட்டுப்படுத்துமா என்பது சந்தேகத்திற்குரியது. தீர்மானம் வேறு, சட்டம் வேறு. எனவே, தமிழ்த்தாய் வாழ்த்தை முதன்மையாகப் பாடுவதை உறுதிசெய்ய அதற்குச் சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். முதல்வர் விஜய் அரசு கொண்டுவரும் மசோதா மூலமாகச் சட்டப்பூர்வ அங்கீகாரம் பெற்றால் மட்டுமே இது நிலையான ஒன்றாக மாறும். அத்தகைய சட்டப்பூர்வப் பாதுகாப்பை அரசு பெறத் தவறினால், ஆளுநர் போன்றவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்தைப் புறந்தள்ளி, அதை மூன்றாம் இடத்திற்குத் தள்ளிவிடும் அபாயம் உள்ளது. இது தொடர்பாகச் சட்டமன்றத்தில் எங்கள் உறுப்பினர் வலியுறுத்தியபோது, அரசு தரப்பில் எவ்விதப் பதிலும் கூறப்படாமல் மௌனம் காக்கப்பட்டது. "தீர்மானமே போதுமானது" என்ற சபாநாயகரின் நிலைப்பாடு ஏற்புடையதல்ல. எனவே, நடப்புச் சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே இதற்கான மசோதாவைக் கொண்டுவந்து, சட்டப்பூர்வ அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்ற கோரிக்கையைச் சட்டமன்றத்தைத் தொடர்ந்து மக்கள் மன்றத்திலும் முன்வைக்கிறோம். ஒன்றிய அரசு என்றாலே இந்த தவெக அரசு பயப்படுகிறது. சட்ட பூர்வமாக இந்த தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கூறியதற்கு தவெக அரசு மவுனமாக இருந்தது. சட்டம் என்பது வேறு, தீர்மானம் என்பது வேறு. தீர்மானம் என்பதை யார் வேண்டுமானாலும் கொண்டு வரலாம். சட்டபூர்வ அங்கீகாரம் பெற வேண்டும். இந்த அரசு அங்கீகாரத்தைப் பெற முயற்சிக்க வேண்டும். தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்திலாவது அரசு இதற்கான தெளிவான பதிலையும் உரிய நடவடிக்கையையும் எடுக்க வேண்டும்" என்றார். தவெக: ``முந்தைய அரசு திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறதா?" - அமைச்சர் அருண் ராஜ் பதில் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/government-and-politics/raghupathy-speaks-to-the-media-regarding-the-resolution-on-the-tamil-thai-vazhthu-song




