சென்னை, 2026-2027-ம் ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட் ஆகஸ்டு 5-ந் தேதி தாக்கல் செய்யப்பட இருக்கிறது. அதற்கு அடுத்த நாள் (6-ந் தேதி) வேளாண் பட்ஜெட் தாக்கல் ஆகிறது. த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் என்பதால் எதிர்பார்ப்பு அதிகம் நிலவுகிறது. இந்த நிலையில், பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. உறுப்பினர்கள், பட்ஜெட் கூட்டத் தொடரில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அறிவுரை வழங்க இருக்கிறார். இதற்காக, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று (ஜூலை 28) மாலை 5 மணிக்கு காணொலிக்காட்சி வழியாக நடைபெற இருக்கிறது. கூட்டத்திற்கு தலைமை தாங்கும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், சட்டசபை கூட்டத் தொடரில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும், எந்தப் பிரச்சினைகளை முன்னெடுக்க வேண்டும், விவாதத்தின்போது யார் யார் பேச வேண்டும் என்பது குறித்து ஆலோசனைகள் வழங்க இருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-mlas-meeting-today-under-the-leadership-of-udhayanidhi-stalin




