மும்பை, டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் தாங்கள் தக்கவைத்துள்ள வீராங்கனைகளின் பட்டியலை வெளியிட்டுள்ளன. 13 வீராங்கனைகளை தக்கவைத்த டெல்லி மகளிர் பிரீமியர் லீக் தொடரின் ஒவ்வொரு சீசனிலும் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, 2027 சீசனுக்காக 13 வீராங்கனைகளை தக்கவைத்துள்ளது. 6 வீராங்கனைகளை விடுவித்துள்ளது. தக்கவைத்த வீராங்கனைகள்: இந்திய வீராங்கனைகள்: ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷபாலி வர்மா, தியா யாதவ், நிகி பிரசாத், மின்னு மணி, என். சரணி, மம்தா மடிவாலா, நந்தினி சர்மா. வெளிநாட்டு வீராங்கனைகள்: லாரா வோல்வார்ட், அன்னபெல் சதர்லாந்து, சினெல்லே ஹென்றி, லூசி ஹாமில்டன், மரிசான் காப். விடுவிக்கப்பட்ட வீராங்கனைகள்: லிசெல்லே லீ, தன்யா பாட்டியா, அலானா கிங், பிரகதி சிங், இ. ஸ்ருஜனா, சினே ராணா. 13 வீராங்கனைகளை தக்கவைத்த ஆர்சிபி 2026 சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, 2027 சீசனுக்காக 13 வீராங்கனைகளை தக்கவைத்துள்ளது. மேலும், 4 வீராங்கனைகளை விடுவித்துள்ளது. தக்கவைத்த வீராங்கனைகள்: அருந்ததி ரெட்டி, லாரன் பெல், பிரத்யூஷா குமார், ரிச்சா கோஷ், ஸ்மிருதி மந்தனா, எல்லிஸ் பெர்ரி, நாடின் டி கிளார்க், பிரேமா ராவத், சாயாலி சத்வாரே, ஜார்ஜியா வோல், பூஜா வஸ்திராகர், ராதா யாதவ், ஸ்ரேயங்கா பாட்டீல். விடுவிக்கப்பட்ட வீராங்கனைகள்: கிரேஸ் ஹாரிஸ், லின்சே ஸ்மித், கௌதமி நாயக், தயாளன் ஹேமலதா. அடுத்த மாதம் ஏலம் மகளிர் பிரீமியர் லீக் (WPL) 2027 சீசனுக்கான வீராங்கனைகள் ஏலம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/sports/cricket/wpl-2027-delhi-capitals-retain-13-and-release-six-while-rcb-keep-13-and-let-go-of-four




