சென்னை, தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, நடிகர் கவினுடன் இணைந்து ‘ஹாய்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தினை லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த விஷ்ணு எடவன் இயக்குகிறார். இந்தப் படத்தினை, '7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்' மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனின் 'ரவுடி பிக்சர்ஸ்' ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. வயதில் சிறியவன் தனக்கு மூத்த வயதுடைய ஒரு பெண்ணின் மீது காதலில் விழுகிறான் போன்ற கதைக்களத்தில் ‘ஹாய்’ படம் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. இசையமைப்பாளர் ஜென் மார்டின் இசையில் இப்படத்தின் மூன்று பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. ‘ஹாய்’ திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 28-ந்தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ‘ஹாய்’ படத்தின் டிரெய்லர் நாளை வெளியாக உள்ளது. நாளை(20-ந்தேதி) மாலை 6.30 மணிக்கு ‘ஹாய்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/cinema/cinemanews/trailer-of-the-movie-hi-starring-kavin-and-nayanthara-to-be-released-tomorrow




