தூத்துக்குடி, கடல் சீற்ற எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் மீன்பிடிக்கக் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடல் சீற்றம் இந்திய தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் (INCOIS) மற்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அளித்துள்ள எச்சரிக்கையைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் செப்டம்பர் 18 மற்றும் 19 ஆகிய 2 நாட்களில் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது. எச்சரிக்கை தூத்துக்குடி மாவட்ட கடலோரப் பகுதிகளில் வழக்கத்தை விட உயரமான கடல் அலைகள் எழும் என்றும், தாழ்வான கடலோரப் பகுதிகளுக்குள் கடல் நீர் உட்புகக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இன்று மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி மீன்பிடி துறைமுக மேலாண்மை அறிவிப்புப் பலகையிலும், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலக சுற்றறிக்கையிலும் இன்று (19.9.2026) ஒரு நாள் விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் மீன்பிடிக்கக் கடலுக்கு செல்ல தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/sea-level-rise-warning-in-thoothukudi-coastal-areas-fishermen-prohibited-from-venturing-into-the-sea-today



