அமராவதி 10 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை, பாலியல் சுரண்டலில் ஈடுபட்டார் என்று சாமியார் மீது இளம்பெண் பரபரப்பு புகார் அளித்துள்ளார். மராட்டியத்தில் உள்ள அமராவதி நகரில் ஆனந்த மடம் என்ற பெயரில் மடம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், தத்தாகிரி குரு ஜெய்ராம்ஜி மஹாராஜ் என்பவர் சாமியாராக இருந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகிறார். இளம்பெண் புகார் இந்த நிலையில், இளம்பெண் ஒருவர் அவருக்கு எதிராக பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார். அதுபற்றி சந்தூர் ரெயில்வே காவல் நிலைய ஆய்வாளர் சுரேஷ் மஸ்கே கூறும்போது, சாமியார் மஹாராஜ் தப்பியோடி விட்டார். அவரை தேடி வருகிறோம் என்றார். அந்த இளம்பெண் அளித்த புகாரில், முதன்முதலாக 2014-ம் ஆண்டு சாமியாரை அவர் சந்தித்துள்ளார். இதன்பின்னர், 2016-ம் ஆண்டு சிறுமியாக இருந்த அந்த இளம்பெண், அது முதல் சாமியாரோடு வசித்து வந்திருக்கிறார். இந்த காலகட்டத்தில், சாமியார் தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை செய்ததுடன், பாலியல் சுரண்டலிலும் ஈடுபட்டு உள்ளார் என புகார் தெரிவிக்கின்றது. தொடர்ந்து பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள் என கூறியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/sexual-abuse-exploitation-for-10-years-young-woman-files-complaint-against-saint




