திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விடுமுறை தினங்களில் லட்சக்கணக்கானோர் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். அந்த சமயங்களில் இலவச தரிசனம வழியாக சாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம் ஆவதாக பக்தர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 90 ஆயிரத்து 956 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். இதில் 33 ஆயிரத்து 46 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். உண்டியல் காணிக்கை ரூ.4 கோடியே 5 லட்சம் செலுத்தப்பட்டு இருந்தது. அன்றைய தினம் 4 லட்சத்து 44 ஆயிரம் லட்டுகள் விற்பனையாகி இருந்தன. அதேபோல், 2 லட்சத்து 94 ஆயிரம் பக்தர்கள் அன்னபிரசாதம் பெற்றனர். 3 ஆயிரத்து 708 பக்தர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது. தற்போது 31 காத்திருப்பு அறைகள் நிரம்பியுள்ள நிலையில், எஸ்.எஸ்.டி. டோக்கன் இல்லாத சர்வதரிசன பக்தர்கள் சுமார் 18 மணி நேரம் காத்தி ருந்து தரிசனம் செய்து வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/devotional/90000-devotees-visit-tirupati-in-a-single-day-405-crore-collected-in-hundi-offerings




