புதுடெல்லி, 46-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி செப்டம்பர் 16-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை உஸ்பெகிஸ்தானின் சமர்கண்டில் நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஓபன் பிரிவில் உலக சாம்பியனான தமிழகத்தின் குகேஷ், பிரக்ஞானந்தா மற்றும் அர்ஜூன் எரிகைசி, நிஹால் சரின், விதித் குஜராத்தி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அணியின் கேப்டனாக ஸ்ரீநாத் நாராயணன் செயல்படுவார். பெண்கள் பிரிவில் கோனெரு ஹம்பி, திவ்யா தேஷ்முக், வந்திகா அகர்வால் மற்றும் தமிழகத்தின் வைஷாலி, சவிதா ஸ்ரீ ஆகியோர் தேர்வாகியுள்ளனர். பெண்கள் அணியை சுவாயம்ஸ் மிஷ்ரா வழிநடத்துவார். 2024-ம் ஆண்டில் ஹங்கேரியில் நடந்த 45-வது செஸ் ஒலிம்பியாட்டில் இரு பிரிவிலும் இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்று புதிய சரித்திரம் படைத்தது நினைவுகூரத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/sports/othersports/chess-olympiad-india-team-gukesh-praggnanandhaa-selected




