சென்னை, பேரறிஞர் அண்ணாவின் பிறந்ததினத்தை முன்னிட்டு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; ”அண்ணா! இந்த மூன்றெழுத்து தமிழ் நிலத்தில் புது சரித்திரம் படைத்தது. மாநிலக் கட்சிகள் ஆட்சியமைத்து ஜனநாயகத்தைப் பரவலாக்க முடியும் என்று இந்திய அரசியலுக்கு புதிய அத்தியாயத்தை எழுதியது. கூட்டாட்சி தத்துவமே இந்திய நாட்டின் அடையாளம் என்று அரசியலமைப்பு சிறப்பை முழுமைப்படுத்தியது. சாமானியர்களும் ஆட்சியாளர்கள் ஆகலாம் என்ற மக்களாட்சி புரட்சியை நிலைநாட்டியது. சமத்துவத்தை முன்னிறுத்திய தந்தை பெரியாரின் கொள்கைகளைத் தேர்தல் அரசியலில் வென்றெடுத்தார்; சமூகநீதியை அரசின் திட்டங்களில் அமல்படுத்தினார்; 'மாநில சுயாட்சி' என்ற வலிமையான அரசியலின் மூலம் 'தமிழ்நாடு' தனித்துவத்தோடு தலைநிமிர வழிகாட்டினார். 'மக்களிடம் செல்', 'உன்னால் முடியும் தம்பி', 'அரசியல் ஆர்வம் குன்றிடும் நாளே ஜனநாயக முறை அழிந்திடும் நாள்' ஆகிய அண்ணாவின் பிரசாரங்களே என்னைத் தேர்தல் அரசியல் சிந்தனை நோக்கிப் பயணிக்க வைத்தன. அரசியல் அறிவியல் மாணவனான எனது ஆசிரியர்களில் மூத்தவரான பேரறிஞர் பெருந்தகை அண்ணாவே எப்பொழுதும் எனது வழிகாட்டி. 'அண்ணாவின் கொள்கை வழியில் அர்ப்பணிப்புடன் பயணிப்போம். அண்ணாவின் மாபெரும் கனவுகளை மீட்டுருவாக்குவோம்' என்று அவரது பிறந்தநாளான இன்று உறுதியேற்போம்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-travel-with-dedication-along-the-path-of-annas-principles-aadhav-arjuna




