வாஷிங்டன், ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. மேலும், ஹர்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதனால், கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. இதையடுத்து, இரு தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. ஆனால், ஹர்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் சரக்கு கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த 12ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதனால் இரு தரப்பும் இடையே மீண்டும் மோதல் வெடித்தது. ஈரான் மீது நேற்று வரை தொடர்ந்து 13 நாட்களாக அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதற்கு ஈரான் பதிலடி கொடுத்தது. தாக்குதல் நிறுத்தம் இந்நிலையில், ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. அதேபோல், அமெரிக்க படைத்தளங்கள் மீதான தாக்குதலை ஈரானும் நிறுத்தியுள்ளது. இதனால் தொடர்ந்து 13 நாட்கள் இரு தரப்புக்கும் இடையே நடந்த மோதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இரு தரப்பு பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த மோதல் நிறுத்தத்தால் மத்திய கிழக்கில் சற்று அமைதி திரும்பியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/world/us-iran-conflict-halts-peace-returns-after-13-days




