தமிழக சட்டசபையில் வாணியம்பாடி எம்எல்ஏ சையத் பாருக் பாஷா பேசுகையில் திருவண்ணாமலை பொதுக் கூட்டத்தில் ஐயூஎம்எல் எம்எல்ஏக்களை திமுகவினர் மிரட்டி கோடி கோடியாக பணம் கொடுப்பதாகவும் அமைச்சர் பதவி கொடுப்பதாகவும் கூறினர் என நான் கூறியதை திமுகவினர் திரித்து பேசுகிறார்கள். தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக கூறி வருகிறார்கள். நான் யாரையும் தவறாக பேசவில்லை. மே 7ஆம் தேதி அதிமுக தலைவரை முதல்வராக்க திமுக திட்டமிட்டிருந்தது. அதை எங்கள் தலைவர் காதர் மொய்தீன் ஏற்க மறுத்தார். அவர் பேட்டியில் சொன்னதைதான் நான் எங்கள் கட்சி கூட்டத்தில் சொன்னேன்’ என்றார். சையத் பாரூக் பாஷா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது எழுந்து பேசிய அமைச்சர் ஷாஜகான், "சோஃபா மாடல் அரசு, முஸ்லீம் லீக் பணம் வாங்கியது, குதிரை பேரம் என பேசுவதை ஏற்க முடியாது. ஐயுஎம்எல் எம்எல்ஏ சையது பாருக் பாஷா, அதிமுகவினர் பற்றி பேசவில்லை.மே 7 ஆம் தேதி ஐயுஎம்எல் கட்சியை தொடர்புகொண்டு அதிமுக தலைவரை முதல்வராக்க வேண்டும் என்று கூறினார். திமுகதான் அந்த முடிவை எடுத்தது. மே 8 ஆம் தேதி வேறொரு முடிவை எடுத்துக் கூறியது. ஐயுஎம்எல் இதனை ஏற்க மறுத்த காரணத்தால் எங்கள் இரண்டு உறுப்பினர்களை மே 8-ம் தேதி இரவு ஹோட்டலில் அடைத்து வைத்தது யார்? மிரட்டியது யார்? எங்களுக்கு காவலுக்கு போட்டது யார்? என்பதை உடைத்து சொல்ல வேண்டியது வரும். ஆளுநர் ஆட்சி இங்கு வந்துவிடக்கூடாது என்று தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தோம்" என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/we-will-have-to-reveal-who-confined-us-in-the-hotel-minister-shahjahan-speaks-out-angrily



