சென்னை, திருவொற்றியூர் பகுதியில் கழிவுநீர் தொட்டி பள்ளத்தில் மணல் சரிந்து விழுந்து ஒப்பந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். தொழிலாளி உயிரிழப்பு திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் பூமிநாதன்(வயது 37). இவர் சென்னை மாவட்டத்தில் ஒப்பந்த தொழிலாளியாக கழிவுநீர் குழி தோண்டும் பணியினை செய்து வருகிறார். இந்த நிலையில் திருவொற்றியூர் அருகே புதிய கழிவு நீர் தொட்டி அமைப்பதற்காக 15 அடி ஆழமான குழி தோண்டப்பட்டு வந்தது. அப்போது பூமிநாதன் குழியினுள் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக குழியின் மேல் இருந்த மணல் திடீரென சரிந்து அவர் மீது விழுந்தது. மணலுக்கு அடியில் சிக்கியதால் வெளியே மீண்டு வரமுடியாமல் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் விசாரணை இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பூமிநாதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் முன்னெச்சரிக்கை நடைமுறைகள் பின்பற்ற பட்டதா என்ற பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/worker-dies-after-sand-collapses-into-water-tank




