சென்னை, சென்னை விமான நிலைய நிர்வாக மாற்றம் தொடர்பான கடிதத்திற்கு விளக்கம் தேவை முதல்-அமைச்சரே என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். நிர்வாகத்தை மாற்ற கோரி கடிதம் இது தொடர்பாக, முன்னாள் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- வரலாற்றுச் சிறப்பு மிக்க, பழமை வாய்ந்த சென்னை சர்வதேச விமான நிலையத்தின் தற்போதைய AAI நிர்வாகத்தை மாற்றி வேறு ஆபரேட்டரிடம் ஒப்படைக்க வேண்டும் என முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க தவெக அரசு முயற்சிக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது? சென்னை விமான நிலையம் கடந்த 2024-25 அறிக்கையின் படி சுமார் 2.24 கோடிக்கும் அதிகமான பயணிகளைக் கையாண்டு லாப வருவாயுடன் சிறப்புடன் செயல்பட்டு வருகிறது. மேலும் தென்னிந்தியாவின் முக்கிய சரக்கு போக்குவரத்து மையமாகவும் செயல்பட்டு வருகிறது. முதல்-அமைச்சர் விளக்கம் தரவேண்டும் இதுமட்டுமன்றி தற்போது விமான நிலைய விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கலுக்காக AAI ரூ. 2,467 கோடி நிதியில் வளர்ச்சித் திட்டத்தையும் மேற்கொண்டு வருகிறது. இப்படி தொடர்ச்சியாக வருவாய் ஈட்டுவதிலும், சரக்குகள், பயணிகளைக் கையாள்வதிலும் சிறப்புடன் செயல்பட்டுவரும் AAI நிர்வாகத்தினை மாற்ற வேண்டிய அவசியம் தவெக அரசுக்கு என்ன? இதுகுறித்து மக்களுக்கு தெளிவான விளக்கத்தை முதல்-அமைச்சர் தரப்பிலிருந்து தரவேண்டியது கடமை. மேலும் கடந்த ஆகஸ்ட் மாதம் எழுதப்பட்ட கடிதம எனது தற்போது வெளிவந்திருப்பதன் கால தாதமம் ஏன்? ஏற்கனவே பரந்தூர் திட்டத்தினை ரத்து செய்துவிட்டு தமிழகத்தை 10 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய தவெக அரசு அடுத்து பொதுத்துறை நிறுவனங்கள் மீதும் கைவைத்திருப்பது இந்த அரசு உண்மையாகவே மக்களுக்கான அரசாக செயல்படுகிறதா என்ற சந்தேகத்தையே எழுப்புகிறது. கடிதத்தினை வாபஸ் பெற வேண்டும் சென்னை விமான நிலையத்தின் எதிர்காலம் தொடர்பான எந்த முடிவும் பயணிகள் நலன், ஊழியர்கள் நலன், பொதுத்துறை முதலீடுகளின் பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை உறுதி செய்த பின்னரே எடுக்கப்பட வேண்டும். முதல்-அமைச்சர் விஜய் அனுப்பிய இக்கடிதத்தினை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/clarification-sought-regarding-the-letter-on-the-change-in-chennai-airport-administration-vanathi-srinivasan




