சென்னை, முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- 2026 செப்டம்பர் 29-ந் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்ட கடிதம், உண்மை யில் ஞானேஷ் குமார் செய்துள்ள ஒரு 'ஒப்புதல் வாக்குமூலம்'. அவர் ஒப்புக் கொண்டிருப்பது: * சிறப்புத் தீவிர திருத்தப் பணியில் பல லட்சம் உண்மையான வாக்காளர்கள் விடுபட்டுள்ளனர். தற்போது விடுபட்ட அந்த வாக்காளர்களை மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார். * விதிகளுக்கு மாறாக, படிவம் 6 சட்டவிரோதமாக திருத்தப்பட்டுள்ளது. * 'இசிஐ நெட்' மீதான கட்டுப்பாடு மையப்படுத்தப்பட்டு, தலைமைத் தேர்தல் அதி காரிகள், மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் மற்றும் வாக்காளர் பதிவு அதிகாரிகளின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ளன. * சிறப்பு தீவிர திருத்தப் பணியின் காரணமாக பல லட்சம் வாக்காளர்கள் 'அவசர மாக' நீக்கப்பட்டுள்ளனர். தற்போது எந்தவொரு எதிர்மறையான முடிவையும் 'அவ சரமாக ' எடுக்கக்கூடாது என்று அவர் உத்தரவிட்டுள்ளார். ஆக 13 கோடியே 30 லட்சம் வாக்காளர்களை நீக்குவதற்காக ஞானேஷ் குமார் பல கோடி ரூபாய் செலவு செய்தார். தற்போது அவர்களை மீண்டும் சேர்ப்பதற்கா கவும் பல கோடி ரூபாய் செலவு செய்து வருகிறார். பா.ஜனதா அரசை பாதுகாக்க தேர்தல் ஆணையத்தை ஞானேஷ் குமார் பயன்படுத்தினார். தற்போது போராட்டங் கள் அனைத்துக்கும் தடை விதித்தும், 11 மெட்ரோ ரெயில் நிலையங்களை மூடி யும் பா.ஜனதா அரசு ஞானேஷ் குமாரை பாதுகாத்து வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/election-commission-has-admitted-that-lakhs-of-voters-were-left-out-p-chidambaram




