கோவை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் டவுன்ஹால் பகுதியில் உள்ள மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. மேயர் ரங்கநாயகி தலைமையில் நடத்த இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, துணை மேயர் வெற்றிசெல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது மத்திய மண்டலத் தலைவர் மீனா லோகு, “மண்டல அலுவலகங்களில் மனை வரன்முறைப்படுத்தும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இது குறித்த முறையான அறிவிப்பை மாநகராட்சி அதிகாரிகள் மண்டலத் தலைவர்களுக்கும், கவுன்சிலர்களுக்கும் தெரிவிக்கவில்லை” என்று குற்றம்சாட்டினார். அவருடன் தி.மு.க கவுன்சிலர்களும், ஆணையாளர் முன்பாக நின்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திமுக, காங்கிரஸ் மோதல் அப்போது காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி உள்ளிட்ட சில கவுன்சிலர்கள் மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையரை முற்றுகையிட்டு செம்மொழி பூங்காவில் ரூ. 40 கோடி முறையீடு நடைபெற்றது குறித்து மேயர் பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்தினார். அ.தி.மு.க கவுன்சிலர்கள் குடிதண்ணீர் வழங்க கோரி காலி குடங்களுடன் தனியாகப் போராட்டம் நடத்தினர். சி.பி.ஐ, சி.பி.எம் கவுன்சிலர்கள் சின்னவேடம்பட்டி ஏரியில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தை அமைக்கக் கூடாது எனக் கூறி தனியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மாமன்றக் கூட்ட அரங்கில் கூச்சல் குழப்பம் நிலவியது. திமுக, காங்கிரஸ் மோதல் அப்போது காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரிக்கும், தி.மு.க பெண் கவுன்சிலர்கள் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. தி.மு.க பெண் கவுன்சிலர்கள் காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரியின் சேலையைப் பிடித்து இழுத்தனர். அதனை மீறி காங்கிரஸ் கவுன்சிலர் காயத்திரி மேடையில் ஏறி நின்று, மாநகராட்சி ஆணையாளருடன் வாக்குவாத்தில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து கூச்சல் குழப்பம் முடிவுக்கு வராமல் கடும் அமளி ஏற்பட்டதால் மாமன்றக் கூட்டத்தை 12 மணி வரை ஒரு மணி நேரம் ஒத்திவைப்பதாக மேயர் ரங்கநாயகி உத்தரவிட்டார். மேயர் ரங்கநாயகி மேலும் சி.பி.எம் கவுன்சிலர்கள் ராமமூர்த்தி, பூபதி, சி.பி.ஐ கவுன்சிலர்கள் சாந்தி, பிரபா ரவீந்திரன் மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி ஆகியோரை 5 பேரை இரண்டு மாத காலத்துக்குப் பணியிடை நீக்கம் செய்து மேயர் ரங்கநாயகி உத்தரவிட்டார். மாநகராட்சிக் கூட்டத்தில் நடைபெற்ற வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு காரணமாகப் பரபரப்பான சூழல் நிலவியது. ’கோவை தவெக-வில் உட்கட்சிப் பூசலா?’ – சூலூர் எம்.எல்.ஏ சுகுமார் விளக்கம்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/government-and-politics/clash-between-dmk-and-congress-councilors-in-coimbatore-corporation




