தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பகுதியில் வாலிபர் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 2 பேர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். வாலிபர் கொலை தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாரதிநகர் பகுதியில், அதே பகுதியைச் சேர்ந்த முனியசாமி மகன் ஞானதிரவியம் (வயது 30) என்பவரை முன்விரோதம் காரணமாக அரிவாளால் தாக்கியதில் அவர் உயிரிழந்தார். தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தில் 2 பேர் கைது மேற்சொன்ன கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளான பாரதி நகரைச் சேர்ந்தவர்களான செல்லபாண்டி மகன் மகாராஜன்(35) மற்றும் முத்து மகன் முத்துராஜ்(25) ஆகிய 2 பேரையும் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி, சம்பந்தப்பட்ட போலீசார் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து திருநெல்வேலி மத்திய சிறையில் அடைத்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/kovilpatti-2-people-arrested-under-the-detention-act-in-connection-with-the-murder-of-a-youth




