போர். போர் நிறுத்தம். புரிந்துணர்வு ஒப்பந்தம். போர் நிறுத்தம். போர். மூன்று நாள்களுக்கு போர் நிறுத்தம். மீண்டும் போர் - இது தான் கடந்த 155 நாள்களாக ஈரான் - அமெரிக்கா போரில் நடந்து வரும் சம்பவங்கள். கடந்த 24-ம் தேதி முதல் இரு நாடுகளும் சத்தமில்லாமல் போர் நிறுத்தத்தில் இருந்தன. ஆனால், அமெரிக்காவிற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்திக்க இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஜூலை 28-ம் தேதி செல்ல, மீண்டும் தாக்குதலை தொடங்கியது ஈரான். இதற்குப் பதிலடி கொடுக்க அமெரிக்காவும் தாக்குதல் நடத்தத் தொடங்கியது. ட்ரம்ப் எச்சரிக்கை நேற்று ட்ரம்ப், "ஈரானை மிகக் கடுமையாகத் தாக்கப் போகிறோம். ஒரு கட்டத்தில் அவர்கள், 'எங்களால் இதற்கு மேல் இதைத் தாங்கிக்கொள்ளவே முடியாது' என்று கதறும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள்" என்று பேசியிருந்தார். ஈரான் தாக்குதல்மகா விஷ்ணு - மிருணாளினி ரவி காதல்: இன்ஸ்டாகிராம் போஸ்ட்; யார் இந்த மகா விஷ்ணு? இந்த நிலையில் ட்ரம்ப் தற்போது தனது ட்ரூத் பக்கத்தில் தாக்குதல் நிறுத்தம் குறித்து பதிவிட்டிருக்கிறார். "இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு உலகம் இதுவரை கண்டிராத அளவிலான ராணுவப் பலத்தோடும், அதிகாரத்தோடும் ஈரானிய இஸ்லாமியக் குடியரசுக்கு எதிராகத் தாக்க தயாராக, முழு வீச்சில் அமெரிக்கா தயாராக இருக்கிறது. கோரிக்கை வந்துள்ளது. இருந்தாலும், ஒரு ஒப்பந்தத்திற்கான எல்லைக்கோடுகள் ஒப்புக்கொள்ளப்பட்டு விட்டதால், எந்தவொரு தாக்குதலையும் நிறுத்தி வைக்குமாறு ஈரான் மற்றும் இதர மத்திய கிழக்கு நாடுகளிடமிருந்து நமக்குக் கோரிக்கை வந்துள்ளது. இதில் ஹார்முஸ் நீர்ச்சந்தியை உடனடியாக, முழுமையாக மற்றும் முற்றிலுமாகத் திறப்பதும், ஈரானின் அணுஆயுத அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதும் அடங்கும். இஸ்ரேலும் கைகோக்கிறது இந்தக் கோரிக்கையின் அடிப்படையில், உலகின் வருங்கால நலனைக் கருதியும், அதேபோல் வளம்மிக்க ஈரானின் எதிர்கால வாழ்வைக் கருதியும், விரைவாக ஒப்பந்தம் எட்டப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன் தாக்குதலை ரத்து செய்ய நான் ஒப்புக்கொண்டுள்ளேன். இந்த உறுதிப்பாட்டில் இஸ்ரேல் நாடும் என்னுடன் கைகோக்கிறது. அனைவரும் உடனடியாக வேலையைத் தொடங்குங்கள், இதை விரைவாகச் செய்து முடியுங்கள்!" முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/government-and-politics/trump-announces-halt-to-iran-strike-after-fresh-peace-proposal




