மும்பை, சர்ச்சைக்கு பெயர் போன பாத்திமா சனா ஷேக், சமீபத்தில் பேசியுள்ள கருத்துகள் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அதாவது, பணத்துக்காக நமக்கு விருப்பமில்லாத பணிகளைக்கூடச் செய்ய வேண்டிய சூழல் ஏற்படும். என தெரிவித்துள்ளார். சர்ச்சைக்கு பெயர் போன பாத்திமா சனா ஷேக் பிரபல பாலிவுட் நடிகையான பாத்திமா சனா ஷேக் 'தங்கல்' படத்தில் அமீர்கான் மகளாக நடித்து பேசப்பட்டார். பின்னர் அதே அமீர்கானுடன் காதல், டேட் டிங் என்று கிசுகிசுக்கப்பட்டார். சர்ச்சைக்கு பெயர் போன பாத்திமா சனா ஷேக், சமீபத்தில் பேசியுள்ள கருத்துகள் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அவர் கூறும்போது, "பாலிவுட் சினிமாவில் பெண்களுக்கு நல்ல கதாபாத்திரங்கள் குறைவாகவே உள்ளன. ஆண்களை ஒப்பிடுகையில் பெண்களுக்கு நல்ல, ஆழமான கதாபாத்திரங்கள் கிடைப்பது அரிது. பணத்துக்காக விருப்பமில்லாததை செய்ய வேண்டிய சூழல் சினிமா என்பது சமூகத்தின் பிரதிபலிப்பு. அங்கும் சில பிரிவினைவாத விஷயங்கள் இருப்பது வருத்தம் தருகிறது. சில நேரங்களில் வாய்ப்புகள் மிகக் குறைவாகவே இருக்கும். அப்போது, பணத்துக்காக நமக்கு விருப்பமில்லாத பணிகளைக்கூடச் செய்ய வேண்டிய சூழல் ஏற்படும். வசதியான குடும்பத்திலிருந்து வரவில்லை நாங்கள் வசதியான குடும்பப் பின்னணியிலிருந்து வரவில்லை. சில சமயங்களில் சமரசம் செய்துகொள்ள வேண்டியிருக்கும். கிடைக்கும் சொற்ப வாய்ப்புகளில் எது சிறந்ததோ அதைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கும். விதவிதமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்று நாம் எவ்வளவுதான் கனவு கண்டாலும், அதை தீர்மானிப்பது நாமாக இருக்க முடியவில்லை. வருமானத்துக்காக, வாழ்க்கைக்காக எதையும் செய்யலாம், எந்த கதாபாத்திரத்திலும் நடிக்கலாம் என்ற முடிவுக்கும் வருகிறோம்". என்று குறிப்பிட்டார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/cinema/cinemanews/we-act-reluctantly-for-the-sake-of-money-dangal-actress-expresses-anguish




