கான்பூர், கான்பூரில் கங்கை நதிக்கரையில் இன்று காலை பயிற்சி விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், பயிற்சி விமானி மற்றும் பயிற்றுநர் ஒருவர் உயிரிழந்தனர். உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூரில் தனியாருக்கு சொந்தமான பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் பைலட்டுகள் 2 பேர் உயிரிழந்தனர். காலை சுமார் 11:30 மணியளவில் கான்பூரில் இருந்து புறப்பட்டு, சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு கத்ரி பகுதியில் உள்ள நத்தாபூர்வா கிராமத்திற்கு அருகே வயலில் விழுந்து விபத்துக்குள்ளான இந்த விமானம், கர்க் ஏவியேஷன் என்ற தனியார் பயிற்சி நிறுவனத்திற்குச் சொந்தமானது என கூறப்படுகிறது. கர்நாடகாவைச் சேர்ந்த அபிஷேக் புஜாரி என்ற பயிற்சி பைலட்டும், குஜராத்தைச் சேர்ந்த மிகவும் அனுபவம் வாய்ந்த பயிற்றுநர் சச்சின் பாட்டியா என்பவரும் உயிரிழந்திருப்பதாக விமானத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இது இரட்டை எஞ்சின் கொண்ட விமானம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தைத் தொடர்ந்து, ஆணையர் லால், கூடுதல் காவல் ஆணையர்கள் விபின் தடா மற்றும் சங்கல்ப் சர்மா, மற்றும் தலைமைத் தீயணைப்பு அதிகாரி தீபக் சர்மா ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஜூனில் காஸ்கஞ்ச் மாவட்டத்தில் இரண்டு சீட்டர் பயிற்சி விமானம் வயலில் விபத்துக்குள்ளானது. அதேபோல, கடந்த மே மாதம், மராட்டியத்தின் பாராமதியில் ரெட்பேர்ட் பிளைட் ட்ரெய்னிங் அகாடமிக்குச் சொந்தமான பயிற்சி விமானம் தரையிறங்கும் போது ஒரு கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/pilot-instructor-killed-in-training-aircraft-crash-in-kanpur




