நீட் தேர்வு உள்ளிட்ட அரசுத் தேர்வுகள் குளறுபடிகளைக் கண்டித்து இந்தியா முழுவதும் மாணவர்கள் சமீபத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மும்பையில் நடந்த மாணவர்கள் போராட்டத்தின் போது, காவல்துறையின் வாகனத்தை வழிமறித்து தடுத்து நிறுத்தியதன் மூலம் தேசிய அளவில் கவனம் ஈர்த்தவர் 27 வயதான மாடல் அழகி ரியா அஹிர் (Rhiya Ahir). அந்த காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதைத் தொடர்ந்து, அவரைப் பலரும் போராட்டத்தின் அடையாளமாகக் கொண்டாடினர். ரியா அஹிர் ஆனால் இந்த நிகழ்வுக்குப் பிறகு, சமூக வலைதளங்களில் தனக்கு எதிரான அவதூறுகளும், இணையவழி அச்சுறுத்தல்களும் கடுமையாக அதிகரித்துள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடன் செய்தியாளர்களைச் சந்தித்த ரியா, ``சில குறிப்பிட்ட அரசியல் கட்சியினர் உட்பட பலர், `140 ரூபாய்க்கு உடலை விற்கும் பெண்' போன்ற மிகவும் இழிவான கருத்துகளைப் பரப்பி வருகின்றனர். இது சாதாரண கேலிச்சித்திரங்கள் அல்லது 'ட்ரோல்' கிடையாது, மிகப்பெரிய குற்றச் செயல். நான் மாணவர்களுக்காக குரல் கொடுத்தேன். இப்போது துன்புறுத்தப்படுகிறேன் இது குறித்து ஜூலை 27-ம் தேதியே காவல் நிலையத்தில் புகார் அளித்தும், இப்போதுவரை (ஆகஸ்ட் 5) வரை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படவில்லை. ஊடகங்கள் என்னை வெறும் 'வைரல் பெண்' என்று பார்க்காமல், அநியாயமாகக் கைது செய்யப்படவிருந்த மாணவர்களைக் காப்பாற்றிய பெண்ணாகப் பார்க்க வேண்டும். இருப்பினும், நான் யாருக்காகக் குரல் கொடுத்தேனோ அந்த இளைஞர்கள் இப்போது என்னுடன் நிற்கிறார்கள் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. நாட்டில் பெண் குழந்தைகளைப் படிக்கவும் விடுவதில்லை, அவர்களைப் பாதுகாக்கவும் விடுவதில்லை" என்று நெகிழ்ச்சியுடன் கண்ணீர் மல்கக் கேட்டுக்கொண்டார். ராகுல் காந்தி இதற்கிடையே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ``கல்வி முறை சீர்திருத்தம் மற்றும் கேள்வித்தாள் கசிவுக்கு எதிராகப் போராடிய மாணவர்களை அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி அச்சுறுத்துகிறது. மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று மிரட்டுகிறது. அத்துடன், போராட்டத்தில் ஈடுபட்ட 15 வயது சிறுமி ஒருவரை மன்னிப்பு கேட்க வற்புறுத்தியதையும் இந்த நாடு பார்த்தது" எனக் குறிப்பிட்டிருக்கிறார். "தொகுதி மறுவரையறையை ஆதரிப்பவர்கள் எட்டப்பர்கள்தான்" - தமிழ்நாடு வந்த ராகுல் காந்தி விமர்சனம் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/trending/viral/viral-woman-riya-ahir-press-meet-about-abuse-in-social-media



