சென்னை, சவுகார் ஜானகி மறைவுக்கு அன்புமணி ராமதாஸ் தனது இரங்கலை தெரிவித்தார். சவுகார் ஜானகி 1931-ம் ஆண்டு பிறந்த சவுகார் ஜானகி, 1950-களில் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர். சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர்., ஜெமினி கணேசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அவர், கலைத்துறையில் ஆற்றிய பங்களிப்புக்காக 2022-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும் பெற்றுள்ளார். ஆந்திர மாநிலத்தை பூர்விகமாக கொண்டவர் இவர். 400-வது படம் கடந்த 1950ஆம் ஆண்டு, 'சவுகார்' என்ற தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமான சவுகார்ஜானகி, 70 ஆண்டுகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் கடைசியாக, 2020ஆம் ஆண்டு சந்தானம் நடிப்பில் வெளியான 'பிஸ்கோத்' படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் சவுகார் ஜானகிக்கு 400-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தென்னிந்தியாவின் பழம்பெரும் திரைப்பட நடிகை சவுகார் ஜானகி அம்மையார் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து வருத்தமடைந்தேன். இரங்கல் 1952-ஆம் ஆண்டில் திரையுலகில் அறிமுகமாகி எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன் தொடங்கி தமிழ்த் திரையுலகின் அனைத்து நடிகர்களுடனும் நடித்தவர். ஏராளமான விருதுகளை வென்றவர். நடிகை சவுகார் ஜானகியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/south-indian-actress-saukar-janaki-dies-anbumani-ramadoss-pays-tribute




