சூளகிரி, சூளகிரி அருகே பண்ணையில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து தவறிவிழுந்து வடமாநில தொழிலாளர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தவறி கீழே விழுந்தனர் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள சாமல்பள்ளம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பண்ணை நிலம் உள்ளது. அங்கு கடந்த 1-ஆம் தேதி மாலையில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணி நடந்தது. அப்போது அங்கு வெல்டிங் வேலை செய்துகொண்டிருந்த மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த பிஷால் டெக்கி (வயது 19) மற்றும் அல்மன் மின்ச் (27) ஆகிய இரு தொழிலாளர்கள், யாரும் எதிர்பாராத நிலையில் கோபுரத்திலிருந்து தவறி கீழே விழுந்தனர். உயிரிழந்தனர் இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்களை சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி அந்த வடமாநில தொழிலாளிகள் 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து பிராபி தோப்பா என்ற மற்றொரு தொழிலாளி சூளகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், கோபுர பணி ஒப்பந்ததாரரான கர்நாடக மாநிலம், சித்ரதுர்கா பகுதியை சேர்ந்த யோகேஷ் (28) என்பவர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது." முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/accident-during-watchtower-construction-in-krishnagiri-2-dead




