பாங்காக் நகரின் துங் சோங் ஹோங் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் வெளிப்புறத்தில், சிமெண்டால் கட்டப்பட்ட பெரிய மீன் தொட்டி இருக்கிறது. இந்த மீன் தொட்டியில் வளர்க்கப்படும் வண்ண மீன்கள் தொடர்ந்து திடீர் திடீரென இறப்பது தொடர்ந்திருக்கிறது. இதற்கிடையில், கடந்த 7-ம் தேதி இரவு 8:30 மணியளவில் சுத்திசாய் என்ற 51-வயது நபர் சைக்கிளில் வந்து, தன் ஆடைகளைக் களைந்து, மீன் தொட்டியில் இறங்கியிருக்கிறார். இதை யதார்த்தமாக கவனித்த வீட்டு உரிமையாளர்கள் அவரை துரத்தியிருக்கின்றனர். இதில் அவர் கீழே விழுந்து காயமடைந்தும் தப்பியிருக்கிறார். கைது செய்யப்பட்ட சுத்திசாய் இதைத் தொடர்ந்து வீட்டு உரிமையாளர் காவல்நிலையத்தில் புகாரளித்திருக்கிறார். அதன் அடிப்படையில் காவல்துறை விசாரணையில் இறங்கியது. மீன் தொட்டி அருகே இருக்கும் சிசிடிவி கேமராவை காவல்துறை ஆய்வு செய்ததில், சுத்திசாய் கடந்த சில தினங்களாக தொடர்ந்து வந்து தொட்டியில் நிர்வாணமாக இறங்கி மீன்களை பாலியல் வன்கொடுமை செய்வது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, காவல்துறை சம்பந்தப்பட்ட நபரைக் கைது செய்து விசாரணையில் ஈடுபட்டது. விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்ட அவர், பாலியல் தேவைக்காகப் பணம் இல்லாததாலும், துணை இல்லாததாலும் இவ்வாறு செய்ததாகத் தெரிவித்துள்ளார். முன்னதாக நாயை வன்கொடுமை செய்ததற்காகச் சிறை சென்ற இவர், மற்ற மீன்களை விடக் கோய் மீன்கள் தனக்குக் குறைந்த அளவே வலியைத் தந்ததால் அவற்றை எதேச்சையாகத் தேர்ந்தெடுத்ததாகக் கூறியது அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்தது. இச்சம்பவம் தொடர்பாக விலங்குகள் வதை தடுப்புச் சட்டம், அத்துமீறி நுழைதல் மற்றும் பொது இடத்தில் அருவருப்பான முறையில் நடந்துகொள்ளுதல் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை – குற்றவாளியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீஸ்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/crime/the-police-have-arrested-a-person-who-sexually-abused-fish


