சென்னை, தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், சி.எம்.டி. அனுமதி உள்ளிட்ட சட்டப்பூர்வ அனுமதிகளை பெற்று தருவதாக கூறி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு தனியார் பள்ளிகளின் நிர்வாகிகளிடம் 100 கோடி ரூபாய் வரை வசூலித்து மோசடி செய்ததாக எழுந்த புகாரில், தனியார் பள்ளிகள் சங்க தலைவர் அரசகுமார் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு எதிராக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் அரசகுமார் கைது செய்யப்பட்டு, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், தனியார் பள்ளிகள் சங்க பொருளாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான முத்துக்குமார் முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி லட்சுமி நாராயணன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்று தருவதாக கூறி பணம் வசூலித்து மோசடி செய்ததாக இதுவரை 117 புகார்கள் வந்துள்ளன. இந்த புகார்கள் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. எனவே மனுதாரரின் முன்ஜாமின் மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-100-crore-fraud-involving-promises-to-secure-permanent-recognition-for-private-schools-177-complaints-received-so-far-shocking-details-revealed-in-high-court




