தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி. கரூர் கூட்ட நெரிசல் வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ., அந்த வழக்கை மேற்பார்வையிடும் ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி ஆகியோருக்கு நேற்று ஒரு புகார் மனுவை தனித்தனியாக கொடுத்தார். அந்த மனுவில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:- * அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கடந்த 2-ந் தேதி பேசிய பொதுப் பேச்சு, கரூர் நெரிசல் விபத்து வழக்கின் முக்கிய சாட்சிகளைப் பாதிக்கும் வகையி லும், நடைபெற்று வரும் விசாரணையில் தலையிடும் முயற்சியாகவும் இருப்பதால், அதுகுறித்து தனி வழக்குப்பதிவு செய்து, அதன் விவரத்தை சுப்ரீம் கோர்ட்டு அமைத்துள்ள மேற்பார்வைக் குழுவிடம் தெரிவிக்க வேண்டும். * முதல்-அமைச்சர் விஜய் கரூருக்கு மேற்கொள்ளவுள்ள பயணத்தையும், உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோரின் குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ள நிதியுதவி, கருணை அடிப்படையிலான பணிநியமனம் அல்லது பிற அரசு நலன்கள் தொடர்பான நடவடிக்கைகளையும் சி.பி.ஐ. கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. ஆதவ் அர்ஜுனா மீதான புகார் என்ன? கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந் தேதி முதல்-அமைச்ச ரும், த.வெ.க. தலைவருமான விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் நெரி சல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக த.வெ.க. மற்றும் சிலர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.மேலும் சி.பி.ஐ. விசாரணையை ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் குழு கண்காணிக்கும் என்றும் தெரிவித்தது. இதனையடுத்து சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.சி.பி.ஐ. விசாரணைக்காக விஜய், 2 முறை தலைநகர் டெல்லி சென்றார். த.வெ.க. சார்பில் பலியானவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்கப்பட்டது. அரசு வேலை சமீபத்தில் சென்னை பனையூரில் மாற்றுக்கட்சியினர் த.வெ.க.வில் இணையும் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, கரூர் நெரி சல் உயிரிழப்புக்கு தி.மு.க.தான் காரணம் என்று பேசியிருந்தார்.இந்த பேச்சுக்கு தி.மு.க. தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இது ஒருபு றமிருக்க முதல்-அமைச்சர் விஜய் வருகிற 10-ந்தேதி கரூர் சென்று பலியானவர்களின் குடும்பத்தில் தலா ஒருவருக்கு அரசு வேலை வழங்க திட்டமிட்டுள்ளார். இதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. இடையீட்டு மனு இதற்கிடையே தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் வக்கீல் அனுராதா அற்புதம் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் இடையீட்டு மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. நீதிமன்றத்தை அரசியல் மேடை ஆக்க வேண்டாம் என தி.மு.க.வுக்கு கோர்ட்டு கண்டனம் தெரிவித்தது. இதன் மூலம் விஜய் கரூர் செல்ல தடை இல்லை என்ற நிலை ஏற்பட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-lodges-complaint-with-cbi-seeking-case-against-minister-aadav-arjuna




