சென்னை, சென்னை கிண்டியில் பொக்லைன் எந்திரம் மோதிய விபத்தில் மதுரையைச் சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மகன் பலியானார். சென்னை சட்டக்கல்லூரி மாணவர் மதுரை மாவட்டத்தை சேர்ந்த உலகாதிபதி (வயது 21), சென்னை தனியார் சட்டக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். உலகாதிபதி வேளச்சேரியில், நண்பர்களுடன் அறை எடுத்து தங்கியிருந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று காலையில், உலகாதிபதி பைக்கில் கல்லூரிக்கு சென்றார். பொக்லைன் எந்திரம் மோதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மகன் பலி கிண்டி அருகே சாலையில் சென்றபோது, போக்குவரத்து நெரிசல் காரணமாக அவருக்கு முன்பாக சென்ற வாகனங்கள் நின்றன. உலகாதிபதியும் பைக்கை நிறுத்தினார். அப்போது பின்னால் வந்துகொண்டிருந்த பொக்லைன் எந்திரம் உலகாதிபதியின் பைக் மீது மோதியது. இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்தபோது, எதிர்பாராத விதமாக பொக்லைன் எந்திரம் உலகாதிபதி மீது ஏறி இறங்கியது. இதில் உலகாதிபதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தில் உயிரிழந்த உலகாதிபதி, அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. பெரியபுள்ளானின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. உலகாதிபதியின் உயிரிழப்புக்கு அ.தி.மு.க. கட்சியினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/former-aiadmk-mlas-son-dies-after-being-hit-by-a-pokeline-machine




