பெர்லின், ஜெர்மனியில் மலேரியா முற்றிலும் ஒழிக்கப்பட்டநிலையில் விமானத்தில் வந்த கொசு கடித்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜெர்மனியின் பிராங்பேர்ட் விமான நிலையத்தில் ஊழியர்களுக்கு உடல் நலக்குறைப்பாடு ஏற்பட்டது. சோதனையில் அவர்களுக்கு மலேரியா பாதிப்பு ஏற்பட்டிருந்தது உறுதியானது. இதுதொடர்பாக 6 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இந்தநிலையில் சிகிச்சை பலனளிக்காமல் 2 விமான ஊழியர்கள் உயிரிழந்தனர். அனோபிலஸ் கொசு கடித்ததால் 6 ஊழியர்களுக்கு மலேரியா பாதிப்பு ஏற்பட்டது மருத்துவ பரிசோதனையில் தெரிந்தது. இருப்பினும் கடந்த நூற்றாண்டிலேயே ஜெர்மனியில் மலேரியா பாதிப்பை முற்றிலுமாக ஒழித்துவிட்டனர். எனவே வெளிநாடுகளுக்கு சென்ற விமானம் மூலமாக இந்த கொசுக்கள் மீண்டும் ஜெர்மனி வந்திருக்கலாம் என சுகா தாரத்துறையினர் உறுதிப்பட தெரிவித்துள்ளனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு விசாரணை நடத்த வுள்ளதாக தெரிவித்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/world/two-german-airport-workers-die-of-malaria-after-mosquito-arrives-on-plane




