சென்னை, பள்ளி மாணவர் கொலை மாணவர்களின் கைகளில் வன்முறையா? தலைநகரிலேயே மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லையா? என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- மாணவர் சென்னை திருவொற்றியூரில் பள்ளி அருகே 12ஆம் வகுப்பு மாணவர் தனுஷ் தாக்குதலில் உயிரிழந்ததாக வெளியாகியுள்ள செய்தி மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. இந்தச் சம்பவத்தில் 11ஆம் வகுப்பு மாணவர்கள் உள்ளிட்டோர் தொடர்புடையதாக கூறப்படும் நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவ்வப்போது பள்ளி மாணவர்களை மையப்படுத்தி வெளியாகும் வன்முறை செய்திகள், ஒரு மாணவனின் தவறாக மட்டும் கடந்து செல்ல முடியாத அளவிற்கு சமூகத்தின் எதிர்காலம் குறித்த கவலையை ஏற்படுத்துகின்றன. அச்சம் இயல்பாகவே எழுகிறது உண்மையில் மாணவர்களுக்கு பள்ளியில், பாடங்கள் கற்று தரப்படுகின்றன. தேர்வுக்கு தயார்படுத்தப்படுகிறார்கள். மதிப்பெண்கள் பெறுவதற்காக பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆனால் கோபத்தை எப்படி கட்டுப்படுத்துவது? கருத்து வேறுபாட்டை எப்படி கையாள்வது? மற்றொரு மனிதனின் உயிரை எவ்வாறு மதிப்பது? தோல்வியையும் அவமானத்தையும் வன்முறையின்றி எதிர்கொள்வது எப்படி? சமூகத்தில் பொறுப்புள்ள மனிதராக எப்படி வாழ்வது? இவை போதுமான அளவில் கற்று கொடுக்கப்படுகிறதா? பள்ளி மற்றும் கல்லூரிகள் அரசின் நிர்வாக அமைப்புகளால் கண்காணிக்கப்படுகிறதா? கல்வி கற்கும் வயதில் வன்முறை உருவாகிறது என்றால், நாளைய சமூகத்தில் அது எந்த வடிவத்தை எடுக்கும் என்ற அச்சம் இயல்பாகவே எழுகிறது. மாணவன் உயிரிழக்கும் நிலை மேலும், சென்னை போன்ற மாநிலத்தின் நிர்வாக செயல்பாடு உள்ள தலைநகரிலேயே பள்ளி மாணவன் தாக்குதலில் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டிருப்பது, மாணவர்கள் மட்டுமல்லாமல் பெண்கள், குழந்தைகள், பொதுமக்களின் பாதுகாப்பு குறித்தும் கேள்விகளை எழுப்புகிறது. உறுதி செய்யப்படுகிறது? தலைநகரின் பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்ய முடியாத நிலையில், தமிழ்நாட்டின் தொலைதூர பகுதிகளில் பள்ளிக்கு செல்லும் மாணவர்களின் பாதுகாப்பு எவ்வாறு உறுதி செய்யப்படுகிறது? நம்பிக்கை ஒவ்வொரு பள்ளி வாசலும் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். ஒவ்வொரு மாணவரும் அச்சமின்றி கல்வி கற்க வேண்டும். ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளை பாதுகாப்பாக வீடு திரும்புவார் என்ற நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். அரசின் கண்காணிப்பு இந்த சம்பவத்திற்குப் பிறகாவது, பள்ளிகளில் மாணவர்களின் மனநிலை மற்றும் நடத்தை மாற்றங்கள், மாணவர்களிடையேயான குழு மோதல்கள், போதைப்பொருள் பயன்பாட்டின் தாக்கம் உள்ளிட்ட பிரச்சினைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, உரிய ஆலோசனையும், வழிகாட்டுதலும் வழங்கும் வகையில் அரசின் கண்காணிப்பு மற்றும் மாணவர் நல அமைப்புகள் வலுப்படுத்தப்பட வேண்டும். தடுப்பு நடவடிக்கை ஆசிரியர்கள், பெற்றோர், கல்வித்துறை, காவல்துறை என அனைவரும் இணைந்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மதிப்பெண் அட்டையில் அதிக மதிப்பெண் பெறும் தலைமுறை மட்டும் நமக்கு தேவையில்லை. மனித உயிரை மதிக்கும் தலைமுறை வேண்டும். வன்முறையை நிராகரிக்கும் தலைமுறை வேண்டும். சகிப்புத்தன்மையுடன் வாழ தெரிந்த தலைமுறை வேண்டும். இன்றைய மாணவர்கள் நாளைய தமிழ்நாடு. நிரந்தர தடுப்பு நடவடிக்கை அவர்களின் கைகளில் புத்தகத்திற்கு பதிலாக வன்முறை உருவாக தொடங்கினால், கேள்வி மாணவர்களிடம் மட்டும் இல்லை. நாம் உருவாக்கி கொண்டிருக்கும் சமூகத்திடமும் இருக்கிறது. தமிழ்நாடு அரசு இந்த சம்பவத்தை ஒரு தனிப்பட்ட குற்றமாக மட்டும் பார்க்காமல், மாணவர்களிடையே உருவாகும் வன்முறையின் வேரை கண்டறிந்து நிரந்தரத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-school-student-murder-raises-questions-on-student-safety-in-capital



