சென்னை, தியாகராய நகரில் பெண்ணிடம் 4 பவுன் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பு எற்படுத்தியது. சங்க சங்கிலி தியாகராய நகர் பகுதியை சேர்ந்தவர் உஷா(வயது 53). இவர் நேற்று மதியம் வீட்டின் அருகே உள்ள கடைக்கு செல்வதற்கு தியாகராய நகர் மேட்லி 1-வது தெரு வழியாக நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் முகவரி கேட்பது போல் உஷாவிடம் பேச்சு கொடுத்தனர். திடீரென்று அவர்கள் உஷா கழுத்தில் அணிந்து இருந்த தங்க சையினை பறித்தனர். சுதாரித்துக்கொண்ட உஷாரான பெண் தங்க சையினை விடாமல் இருக்கிப்பிடித்து கொண்டு திருடன் திருடன் என்று சத்தம் போட்டவாறு கொள்ளையர்களிடம் இருந்து போராடினார். உடனே கொள்ளையர்கள் உஷாவை தாக்கி கீழே தள்ளி விட்டு 4 பவுன் தங்க சையினை பறித்தனர். பின்னர் மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். வழக்கு பதிவு இது குறித்து உஷா மாம்பலம் குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி. வி. காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/4-pounds-gold-chain-snatched-from-woman-in-thiagarajan-nagar




