வாழப்பாடி, அரசு மாணவிகள் விடுதியில் தங்கி படித்த 2 மாணவிகளுக்கு மது கொடுத்து பாலியல் தொந்தரவு செய்த சம்பவம் எதிரொலியாக விடுதி பெண் ஊழியர், நண்பருடன் போக்சோவில் கைது செய்யப்பட்டார். மது கொடுத்து பாலியல் தொந்தரவு சேலம் மாவட்டத்தில் சமீபகாலமாக அடுத்தடுத்து பாலியல் புகார்கள் வந்தபடி உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலம் அருகே உள்ள கொண்டலாம்பட்டி பகுதியில் 14 வயது சிறுமியை 7 பேர் சேர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் சேலம் மாவட்டம் வாழப்பாடியில் 2 மாணவிகளுக்கு மது கொடுத்து பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் தெரிய வந்துள்ளது. இந்த பகீர் தகவல் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரசு மாணவிகள் விடுதி சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் அரசு பெண்கள் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கான விடுதி உள்ளது. இங்கு பல்வேறு பகுதியில் இருந்து மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இந்த விடுதியில் தூய்மை பணியாளராக வேலை பார்க்கும் ராதிகாவும், அதே பகுதியை சேர்ந்த ரகுபதி என்ற கார் டிரைவரும் நட்புடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு ரகுபதி, ராதிகாவிடம் செல்போனில் பேசிக் கொண்டிருந்தபோது அருகில் நின்று கொண்டிருந்த பள்ளி மாணவிகள் 2 பேரை ரகுபதிக்கு அறிமுகப்படுத்தியதாக தெரிகிறது. இரவு நேரத்தில் அதன்பிறகு அடிக்கடி ரகுபதியை மாணவிகள் ராதிகாவின் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த 8-ந் தேதி இரவு மாணவிகள் விடுதி தூய்மை பணியாளர் ராதிகாவிற்கு பீர் பாட்டில் மற்றும் சில்லி சிக்கன் ஆகியவற்றை ரகுபதி கொடுத்ததாக தெரிகிறது. இதையடுத்து இரவு நேரத்தில் ராதிகா அந்த 2 பள்ளி மாணவிகளுடன் சேர்ந்து மது அருந்தியதாக தெரிகிறது. மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அப்போது அங்கு வந்த ரகுபதி தனது மோட்டார் சைக்கிளில் 2 மாணவிகளையும் தனிமையான இடத்திற்கு அழைத்துச்சென்றுள்ளார். அங்கு 2 மாணவிகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. மாணவிகளை விடுதிக்கு அழைத்து வருமாறு ராதிகா அழைத்ததன் பேரில் மீண்டும் விடுதிக்கு வந்து அவர்களை ரகுபதி விட்டு சென்றார். இதன் பின்னர் யாரிடமும் இதுகுறித்து மாணவிகள் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் கடந்த 15-ந் தேதி சுதந்திர தின விடுமுறையில் மாணவிகள் அவர்களது வீட்டுக்குச் சென்றிருந்தனர். அப்போது அவர்கள் பெற்றோரிடம் ரகுபதி நடந்து கொண்ட விவரம் குறித்து தெரிவித்தனர். மேலும் பள்ளிக்கு இனி செல்வதில்லை எனக்கூறியதை கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பெண் ஊழியர் கைது இது குறித்து பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், வாழப்பாடி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி, சப்-இன்ஸ்பெக்டர் நிர்மலா மற்றும் மகளிர் போலீசார் நடத்திய விசாரணை முடிவில் மாணவிகள் விடுதி தூய்மை பணியாளர் ராதிகாவை போக்சோ சட்டத்தில் நேற்று மதியம் கைது செய்தனர். மாணவிகளுக்கு மது வாங்கி கொடுத்து பாலியல் தொல்லை செய்ததாக ரகுபதி மீதும் போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டு தேடப்பட்டு வந்த நிலையில் நேற்று நள்ளிரவில் அவரையும் போலீசார் கைது செய்தனர். போலீசார் விசாரணை ராதிகாவும், அவரது நண்பர் ரகுபதியும் வேறு மாணவிகள் யாருக்கும் மது கொடுத்துள்ளனரா? வேறு மாணவிகள் யாரும் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனரா? என்றும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/schoolgirls-sexually-harassed-after-being-given-alcoholshocking-incident-at-a-government-hostel




