சென்னை, நேற்று 'இருமுடி' (Irumudi) திரைப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. எவ்வளவு அழகான படம் இது. நான் சற்றும் எதிர்பாராத விதமாக இது என் மனதைத் தொட்டது. என்று நடிகை ராஷ்மிகா மந்தனா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பாராட்டுகளை பெற்ற ‘இருமுடி’ படம் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ரவி தேஜா நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘இருமுடி’. இப்படத்தை சிவா நிர்வாணா இயக்கியுள்ளார். இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படம் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் என பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனா ‘இருமுடி’ படத்தை பார்த்துவிட்டு, தனது சமூக வலைதளப் பக்கத்தில் படக்குழுவை பாராட்டியுள்ளார். “அழகான திரைப்படம்” தனது பதிவில் ராஷ்மிகா, “நேற்று 'இருமுடி' (Irumudi) திரைப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. எவ்வளவு அழகான படம் இது. நான் சற்றும் எதிர்பாராத விதமாக இது என் மனதைத் தொட்டது. பொதுவாகச் சிறிய ஊர்களில் வளரும்போது, ஏதேனும் நடந்தாலோ அல்லது ஏதேனும் நம்மைப் பாதித்தாலோ, அதை நம் பெரியவர்களிடம் சொல்வதே நமது முதல் எதிர்வினையாக இருக்கும்; ஏனெனில் அதுதான் நம்மிடம் உள்ள அப்பாவித்தன்மை. ஆனால் பிறகு எதார்த்தம் நம்மைத் தாக்குகிறது. சூழ்நிலை எதுவாக இருந்தாலும் அமைதியாக இருக்க வேண்டும் என்று நமக்குச் சொல்லப்படுகிறது. இந்தப் படம் ஒரு அற்புதமான ஆச்சரியம்; இது கட்டாயம் பேசப்பட வேண்டிய ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசுகிறது. படக்குழுவினருக்கு வாழ்த்து வாழ்த்துகள் ரவி தேஜா சார். இந்த வெற்றிக்கு உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். நக்ஷத்ராவுக்கும் வாழ்த்துகள். இந்தப் படத்தில் நீங்கள் ஒரு கதிரொளியாகத் திகழ்ந்தீர்கள். உங்கள் புன்னகை என்னையும் புன்னகைக்க வைத்தது. வாழ்த்துகள் செல்லமே. சிவா நிர்வாணா இந்த வெற்றிக்கு நீங்கள் முழுத் தகுதியுடையவர். உங்களுக்காக மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். முழு குழுவிற்கும் வாழ்த்துகள் - இது போன்ற ஒரு அழகான படத்தை உருவாக்கியதற்கு நன்றி.” என்று குறிப்பிட்டுள்ளார். Yesterday I had the opportunity to watch Irumudi. ❤️ முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/cinema/cinemanews/it-addresses-a-subject-that-needed-to-be-discussed-rashmika-praises-the-film-irumudi




