'பிரேமம்' திரைப்படம் மூலம் அறிமுகமாகி, தற்போது மலையாளம் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அனுபமா பரமேஸ்வரன். சமீபத்தில் ஊடகவியலாளர் தன்யா வர்மாவுக்கு அளித்த பேட்டியில், காதலித்தவரின் பெயரைக் குறிப்பிடாமல் மனம் திறந்து பேசியிருந்தார். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தலங்களில் வைரலாகி இருந்தன. அனுபமா பரமேஸ்வரன் - துல்கர் சல்மான் இந்நிலையில் அதேபேட்டியில் நீங்கள் கஷ்டமான காலகட்டங்களைச் சந்திக்கும்போது திரைத்துறையில் இருக்கும் எந்த நபரின் ஆதரவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்? என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அதற்குப் பதிலளித்த அவர், "இந்தக் கேள்வியைக் கேட்கும்போது என் நினைவுக்கு வரும் முதல் பெயர் துல்கருடையதுதான். நான் எப்போதெல்லாம் மனசோர்வுடன் இருக்கிறேனோ, அப்போதெல்லாம் துல்கர் எனக்கு மெசேஜ் அனுப்புவார். அதைப் பார்க்கும்போது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கும். "இதை அவர் 12 வருடங்களுக்கு முன்பு என்னிடம் சொன்னார்!" - நிவின் பாலி வீடியோவை பகிர்ந்த அனுபமா துல்கரிடம் சிறிது நேரம் பேசிய பிறகு, நான் மீண்டும் இயல்புநிலைக்குத் திரும்பிவிடுவேன். துல்கரைப் போலவே நான் நம்பக்கூடிய இன்னொரு நபர் ராம். நான் தெலுங்கு சினிமாவைச் சேர்ந்த ராம் போத்தினேனியைச் சொல்கிறேன். துல்கர் சல்மான் கடந்த சில நாட்களாகவே பலர் என்னைக் கூப்பிட்டு, நான் நலமாக இருக்கிறேனா என்று விசாரித்து வருகிறார்கள். அதெல்லாம் எனக்கு மகிழ்ச்சி தருகிறது. ஆனால் மற்றவர்களை விட நான் எப்போதும் அதிகம் நம்பக்கூடிய ஒரு நபர் துல்கர்தான்" என்று கூறியிருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://cinema.vikatan.com/mollywood/anupama-parameshwaran-about-dulquer-salman




