இன்று நமது செல்போனில் ஒரு கேள்வியைக் கேட்டால் சில நொடிகளில் பதில் கிடைக்கிறது. கட்டுரை எழுதுகிறது; நினைத்த காட்சியைப் படமாக உருவாக்குகிறது பெரிய ஆவணங்களைச் சுருக்குகிறது; கணினி நிரல்களைக்கூட உருவாக்கித் தருகிறது. இப்போது அதையும் தாண்டி, நாம் சொல்லும் வேலையைப் புரிந்து கொண்டு திட்டமிட்டு முடித்துத் தரும் அளவுக்குச் செயற்கை நுண்ணறிவு வளர்ந்திருக்கிறது. இவ்வளவு இயல்பாக நம் வாழ்க்கைக்குள் கலந்துவிட்ட இந்தத் தொழில்நுட்பத்தின் பயணம் எங்கே, எப்போது தொடங்கியது? ஆரம்பகால கணினிகள் கணக்குகளைச் செய்யும் இயந்திரங்களாகவே பார்க்கப்பட்டன. ஆனால், 'மனிதனைப் போல ஒரு இயந்திரத்தால் சிந்திக்க முடியுமா? என்ற கேள்வி விஞ்ஞானிகளிடம் எழுந்தது. 1950-ம் ஆண்டில் கணிதவியலாளர் ஆலன் டூரிங் இந்தக் கேள்வியை அறிவியல் உலகின் முன் வைத்ததுடன், இயந்திர நுண்ணறிவை மதிப்பிடுவதற்கான சோதனை முறையையும் முன்வைத்தார். பின்னாளில் அது 'டூரிங் சோதனை' என்று புகழ்பெற்றது. செயற்கை நுண்ணறிவின் தந்தை இந்தச் சிந்தனையைத் தனித்த ஆய்வுத்துறையாக வளர்த்தவர்களில் முக்கியமானவர் ஜான் மெக்கார்த்தி. அதனால்தான் அவர் 'செயற்கை நுண்ணறிவின் தந்தை' என்று அழைக்கப்படுகிறார். 1955-ம் ஆண்டில் 'செயற்கை நுண்ணறிவு' என்ற சொல்லை அவர் முன்வைத்தார். 1956-ம் ஆண்டு நடைபெற்ற டார்ட்மவுத் ஆய்வுக் கூட்டம், செயற்கை நுண்ணறிவு தனித்த ஆய்வுத்து றையாக உருவெடுத்த முக்கியத் தருணமாக அமைந்தது. ஏ.ஐ. ஆய்வுகளில் செல்வாக்கு செலுத்திய 'லிஸ்ப்' கணினி மொழியையும் மெக்கார்த்தி உருவாக்கினார். ஆனால், ஏ.ஐ. ஒரே மனிதரின் கண்டுபிடிப்பு அல்ல. ஆலன் டூரிங், கிளாட் ஷானன், மார் வின் மின்ஸ்கி, ஆர்தர் சாமுவேல் உள்பட பல விஞ்ஞானிகளின் ஆய்வுகளும் அதன் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டன. சொன்னதைச் செய்த இயந்திரம். கற்றுக்கொள்ளத் தொடங்கியது! ஆரம்பத்தில் மனிதர்கள் எழுதிக் கொடுத்த விதிகளின்படியே கணினிகள் செயல்பட்டன. பின் னர், தரவுகளையும், உதாரணங்களையும் கொடுத்தால் அவற்றிலிருந்து இயந்திரமே கற்றுக் கொள்ளும் 'இயந்திரக் கற்றல்' (Machine learning) வளரத் தொடங்கியது. இதில் ஆர்தர் சாமுவேலின் பங்களிப்பு முக்கியமானது. அடுத்ததாக மனித மூளையின் செயல்பாட்டை முன்மாதிரியாகக் கொண்ட செயற்கை நரம்பியல் வலைப்பின்னல்கள் வளர்ச்சி பெற்றன. இணையம் மூலம் பெருமளவிலான தரவு கிடைத்ததும், கணினிகளின் செயல்திறன் அதிகரித்ததும் 'ஆழமான கற்றல்' (Deep learning) புதிய வேகம் பெற்றது. இதில் ஜெப்ரி ஹிண்டன், யோஷுவா பெங்கியோ, யான் லெகுன் ஆகியோரின் ஆய்வுகள் முக்கியப் பங்காற்றின. இந்தப் பங்களிப்புக்காக மூவருக்கும் 2018-ம் ஆண்டுக்கான 'டூரிங் விருது' வழங்கப்பட்டது. பேசுகிறது. எழுதுகிறது. உருவாக்குகிறது! தரவுகளிலிருந்து கற்றுக்கொண்டு கணிப்புகளைச் செய்த ஏ.ஐ. அடுத்தகட்டத்தில் புதிதாக ஒன்றை உருவாக்கவும் கற்றுக்கொண்டது. உரை, படம், இசை,வீடியோ, கணினி நிரல் எனப் பலவற்றை உருவாக்கும் 'உருவாக்கும் செயற்கை நுண்ணறிவு' (Generative AI) வேகமாக வளர்ந்தது. சாட் ஜி.பி.டி. போன்ற ஏ.ஐ. கருவிகளின் வருகைக்குப் பிறகு, ஆய்வுக்கூடங்களில் இருந்த செயற்கை நுண்ணறிவு சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கைக்குள் வந்துவிட்டது. பெருமளவிலான தரவு, சக்திவாய்ந்த கணினித் திறன், மேம்பட்ட கணக்கீட்டு முறைகள் ஆகியவை ஒன்றிணைந்ததே இந்த அதிவேக வளர்ச்சிக்கு முக்கியக் காரணம். ஏ.ஐ. வளர்ச்சிப் பாதை 1921-'ரோபோ' என்ற சொல் காரெல் சாபெக்கின் நாடகத்தின் மூலம் 'ரோபோ' என்ற சொல் உலகிற்கு அறிமுகமானது. 1950-இயந்திரம் சிந்திக்குமா? ஆலன் டூரிங் இயந்திர நுண்ணறிவைச் சோதிக்கும் 'இமிடேஷன் விளையாட்டு' என்ற முறையை முன்வைத்தார். இதுவே பின்னர் 'டூரிங் சோதனை' என அறியப்பட்டது. 1956-ஏ.ஐ. பிறந்தது டார்ட்மவுத் ஆய்வுக் கூட்டத்துடன் செயற்கை நுண்ணறிவு தனித்த ஆய்வுத்துறையாக உருவெடுத்தது. 1959-இயந்திரக் கற்றல் ஆர்தர் சாமுவேலின் பணிகளால் 'இயந்திரக் கற்றல்' என்ற சொல் பரவலான கவனம் பெற்றது. 1961-தொழிற்சாலைக்குள் ரோபோ 'யூனிமேட்' என்ற தொழிற்சாலை ரோபோ, ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் உற்பத்திப் பிரிவில் பணியாற்றத் தொடங்கியது. 1966-உரையாடத் தொடங்கிய கணினி மனிதர்களுடன் உரையாடுவது போன்ற அனுபவத்தை வழங்கிய முன்னோடி கணினி நிர லான 'எலிசா' உருவானது. 1980-கள் வளர்ச்சியும் வீழ்ச்சியும் ‘எக்ஸ்பெர்ட் சிஸ்டம்' அமைப்புகள் வளர்ந்ததால், ஏ.ஐ. வளர்ச்சி தடைபட்டது. இந்த காலகட் டத்தை ஏ.ஐ.யின் உறைநிலை காலம் என்கிறார்கள். 1997-மனிதனை வென்ற கணினி ஐ.பி.எம். நிறுவனத்தின் 'டீப் புளூ', உலக செஸ் சாம்பியன் கேரி காஸ்பரோவைவீழ்த்தியது. 2011-பேசும் உதவியாளர்கள் ஐ.பி.எம். 'வாட்சன்' மனித சாம்பியன்களை வினாடி-வினா போட்டியில் வென்றது. ஆப்பிளின் 'சிரி' அறிமுகமானது. 2012-ஆழமான கற்றலின் எழுச்சி படம், குரல் உள்ளிட்டவற்றை அடையாளம் காணும் திறனில் செயற்கை நுண்ணறிவு பெரிய முன்னேற்றம் கண்டது. 2020-எழுதத் தொடங்கிய ஏ.ஐ. ஜி.பி.டி.-3 போன்ற மொழி மாதிரிகள் மனிதர்களைப் போன்ற நடையில் உரை மற்றும் கணினி நிரல்களை உருவாக்கும் திறனை வெளிப்படுத்தின. 2021-படம் உருவாக்கிய ஏ.ஐ. வார்த்தைகளில் கொடுக்கப்படும் கட்டளைகளிலிருந்து படங்களை உருவாக்கும் 'டால்-இ கவ னம் பெற்றது. 2022-சாட் ஜி.பி.டி. புரட்சி சாட் ஜி.பி.டி.யின் வருகையால் உருவாக்கும் செயற்கை நுண்ணறிவு (Generative AI) பொது மக்களின் அன்றாடப் பயன்பாட்டுக்குள் வேகமாக நுழைந்தது. 2023-2025 பல்திறன் ஏ.ஐ. உரை, படம், குரல், வீடியோ, ஆவணங்கள் எனப் பலவகையான தகவல்களைக் கையாளும் செயற்கை நுண்ணறிவு வேகமாக வளர்ந்தது. 2026 ஏ.ஐ. ஏஜெண்டுகள் கேள்விகளுக்குப் பதில் சொல்வதைத் தாண்டி, இணையம் மற்றும் மென்பொருள் கருவிகளைப் பயன்படுத்தி வேலைகளைச் செய்து முடிக்கும் செயற்கை நுண்ணறிவு முகவர்கள் முன்னிலைக்கு வந்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/the-ai-that-rules-the-world-today-where-did-it-start-a-special-look




