தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் சரபோஜிராஜபுரம் பேருந்து நிறுத்தம் அருகே, பயணிகளை ஏற்றிக் கொண்டு தஞ்சையில் இருந்து கும்பகோணம் சென்ற பேருந்தும், கும்பகோணத்தில் இருந்து தஞ்சை சென்ற பேருந்தும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில், கும்பகோணம் சென்ற பேருந்தின் ஓட்டுநர் பாலாஜி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு பேருந்து ஓட்டுநர் பிரவீனுக்கு இரு கால்களிலும் முறிவு ஏற்பட்டது. இந்த விபத்தில் பேருந்துகளில் இருந்த சுமார் 25 பயணிகளுக்கு படுகாயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்களை அப்பகுதி மக்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக அய்யம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/2-buses-collide-head-on-in-thanjavur-driver-killed-25-injured




