90களின் தொடக்கம். மதுரையிலுள்ள கிராமம் ஒன்றில், சாதி வெறியால் தன் அம்மாவையும், அக்காவையும் இழந்த சுப்பு (சனந்த்), தன் அப்பா ('வேட்டை' முத்துக்குமார்), அண்ணன்களுடனும் வாழ்ந்து வருகிறார். தன் பால்ய காலம் முதல் உயிர்த்தோழனாக இருக்கும் கார்த்தியுடன் (ரிஷிகாந்த்) பொறுப்பில்லாமலும், ரவுடிஸம் செய்துகொண்டும் நாள்களைக் கடத்தும் சுப்புவுக்கு, தன் குடும்பம் மீதும், சாதிய அமைப்புகள் மீதும் வெறுப்பிருக்கிறது. இந்நிலையில், சுப்புவின் வாழ்க்கையில் டோரதி (கீர்த்தி சுரேஷ்) வர, அதைத் தொடர்ந்து இரு நண்பர்களின் வாழ்க்கையிலும் நிகழும் அதிரடி மாற்றங்களும், அவை சொல்லும் செய்தியுமே கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் 'டோரதி' திரைப்படம். dorothy review | டோரதி விமர்சனம் கோபக்கார இளைஞனுக்கான துடுக்குத்தனம், காதலின் வலி, நண்பன் மீதான பாசம், அவமானங்கள் தரும் வேதனை, துப்பாக்கியும் கையுமாக நடக்கும் மனப்போராட்டம் என உணர்ச்சிக் கொந்தளிப்புள்ள கதாபாத்திரத்தைக் கச்சிதமாகக் கையாண்டிருக்கிறார் ரிஷிகாந்த். ஆக்ரோஷம், சேட்டை, பாசம் என வழக்கமான இளைஞனுக்கான மீட்டரிலும், உணர்வுகளோடு மல்லுக்கட்டி, அன்பைத் தேடும் மீட்டரிலும் படத்தைத் தாங்குகிறார் சனந்த். சிறிய திரைநேரமே வந்தாலும், தேவையான தாக்கத்தைக் கொடுத்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். 'வேட்டை' முத்துக்குமார், ராமச்சந்திரன் துரைராஜ், ஜீவா சுப்பிரமணியன், சௌந்தரராஜன் ஆகியோர் கதைக்களத்தின் தூண்களாக நிற்கிறார்கள். மழையில் தோய்ந்த 90களின் மதுரை மாவட்ட கிராமத்தையும், வட இந்தியாவின் அத்துவான நிலப்பரப்பையும் திரைமொழிக்கு ஏற்ப நேர்த்தியாகக் கையாண்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர் எஸ். திரு. இந்தத் திரைமொழிக்கு கணேஷ் சிவாவின் ஆர்ப்பாட்டமில்லாத படத்தொகுப்பும் கைகொடுத்திருக்கிறது. 'கல்யாண விருந்து', 'முத்துமணி' எனக் காதல், ஆட்டம் பாட்டம், ஆற்றாமை உள்ளிட்ட அனைத்து உணர்வுகளுக்கும் உயிரூட்டியிருக்கிறது இளையராஜாவின் இசை. dorothy review | டோரதி விமர்சனம் கதாபாத்திரங்களின் அகப்போராட்டங்களையும், அதிர்வுகளையும் மனதிற்கு நெருக்கமாக்கியிருக்கிறது அவரின் பின்னணி இசை. தயாரிப்பு வடிவமைப்பாளர் குமார் கங்கப்பன், ஆடை வடிவமைப்பாளர் பிரவீன் ராஜா ஆகியோரின் உழைப்பும் கவனிக்க வைக்கிறது. Mandaadi Review: புதிய களம், பழைய டெம்ப்ளேட்; ஆனாலும் மிரட்டும் தாட்டியக்காரன் இந்த மண்டாடி! தொடக்கத்திலேயே ஒரு அதிர்ச்சியைக் கொடுத்துவிட்டு, பள்ளிக் கால பின்கதைக்குப் போகிறது திரைக்கதை. காமெடி, காதல், ஆக்ஷன், நட்பு எனக் கலகலப்பாகவும், அதேநேரம் கதையின் மையத்தையும் தொட்டுத்தொட்டுப் பேசியபடியே சுவாரஸ்யமாகவும் சொல்கிறது நேர்த்தியான திரைக்கதை. மிகக்குறைந்த எண்ணிக்கையிலான கதாபாத்திரங்களைக் கொண்டு, அவற்றை ஆழமாகவும், தெளிவாகவும் எழுதியதோடு, கதையின் ஆன்மாவிலிருந்து விலகாமல் நேர்க்கோட்டில் பயணிக்கிறது திரைக்கதை. சாதாரணமான காட்சிகளைக் கூட, நேர்த்தியான திரைமொழி அர்த்தப்பூர்வமாக்கி, ரசிக்க வைக்கிறது. கார்த்தி - சுப்பு நட்பும், கதையின் பேசுபொருளும் தொடக்கத்தில் வெவ்வேறாக இருந்தாலும், அவை கச்சிதமாக இணையும் இடங்கள் நச்! dorothy review | டோரதி விமர்சனம் உணர்ச்சிப் போராட்டம், த்ரில்லர் போராட்டம் என இரண்டாம் பாதி பெரிய பொறுப்பைத் தன்மீது ஏற்றிக்கொள்கிறது. திருப்பங்கள், அதனால் பாதிக்கப்படும் பிரதான கதாபாத்திரங்கள், அவற்றின் மனப்போராட்டம் எனப் பயணிக்கிறது படம். அடிப்படைவாதம், ஆணாதிக்கம், சாதியம், போலி கௌரவம் போன்ற பிற்போக்குத்தனங்களைக் கேள்வி கேட்கும் வசனங்களும், கதாபாத்திரங்களின் மனமாற்றங்களைப் பேசும் வசனங்களும் கைதட்டல் பெறுகின்றன. சமூகத்தில் நிலவும் பிற்போக்கு மனநிலையைக் காட்சிப்படுத்தி, அவற்றுக்குச் சரியான சாட்டையடியைத் திரைக்கதை கொடுத்தாலும், சில இடங்களில் அவை ஓவர்டோஸ் ஆவது மைனஸ் ஆகவும் மாறுகிறது. மேலும், புனிதப்படுத்தல், தெய்வீகத்தன்மையைத் திணித்தல் போன்றவை ஒருகட்டத்திற்கு மேல் படம் பேசும் அரசியலுக்கு பலம் சேர்க்காமல் போகின்றன. அவற்றைத் தாண்டி, கார்த்தி - சுப்புவின் நட்பும், அவர்களுக்கு இடையிலான உரையாடல்களும் படத்தைத் தூக்கி நிறுத்துகின்றன. dorothy review | டோரதி விமர்சனம் மெல்லுணர்வுகளுக்கிடையில், கொஞ்சம் ட்விஸ்ட், கொஞ்சம் காமெடி என நகர்ந்து, இறுதிக்காட்சியைத் தொடும் திரைக்கதை, கைத்தட்டலைப் பெறுகிறது. பாலியல் பாகுபாடு, திருநர் சமூகத்தின் அகநிலை எனத் தமிழ் சினிமா பேசத் தயங்கும் விஷயங்களைத் தொட்டிருக்கும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்கு பாராட்டுகள்! திரையாக்கத்திலும், பேசுபொருளிலும் முழுமையான திரையனுபவத்தைத் தந்து, முக்கியப் படைப்பாக நிமிர்ந்து நிற்கிறாள் இந்த 'டோரதி'. Bethlehem Kudumba Unit Review: க்யூட் நிவின் பாலி, ஸ்வீட் மமிதா - மற்றுமொரு அடிபொலி மலையாள சினிமா! சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள. உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://cinema.vikatan.com/kollywood/keerthy-suresh-rishikanth-starrer-karthik-subbarajs-dorothy-movie-review




