நீலகிரி, நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சமீபகால மாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சிறுத்தைகளின் அச்சுறுத்தல் காரணமாக தேயிலை தோட்ட தொழிலாளர்களும், பொதுமக்களும் அச்சமடைந்து உள்ளனர். இரவில் உலா வரும் சிருத்தை இந்த நிலையில் குன்னூர் அருகே உள்ள நல்லப்பன் தெரு பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் உலா வருகின்றன. பகல் நேரங்களில் அருகில் உள்ள தேயிலை தோட்டங்களில் ஓய்வெடுப்பதும், இரவில் ஊருக்குள் உலா வருவதும் வழக்கமாகியுள்ளது. இது அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. சிறுத்தைகளின் நடமாட்டம் குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தும், அவற்றை பிடிக்க இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். எனவே விரைவாக இப்பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தைகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/leopard-sightings-near-coonoor-public-in-a-state-of-panic




