ஜமைக்கா, கரீபியன் பிரீமியர் லீக் 14வது கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 7ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த டி20 கிரிக்கெட் தொடரில் அன்டிகுவா அண்ட் பார்புடா பால்கன்ஸ், பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ், கயானா அமேசான் வாரியர்ஸ், செயின்ட் லூசியா கிங்ஸ், செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ், ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ், ஜமைக்கா கிங்ஸ்மென் ஆகிய 7 அணிகள் இடம்பெற்றுள்ளன. ஜமைக்கா கிங்ஸ்மென் வெற்றி இந்நிலையில், கரீபியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 8வது லீக் ஆட்டத்தில் ஜமைக்கா கிங்ஸ்மென் - ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜமைக்கா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ட்ரின்பகோ 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் பூரன், போலார்டு அதிகபட்சமாக தலா 44 ரன்களை சேர்த்தனர். இதனை தொடர்ந்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் களமிறங்கிய ஜமைக்கா 18.4 ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் ட்ரின்பகோவை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஜமைக்கா அபார வெற்றிபெற்றது. ஜமைக்கா தொடக்க வீரர் மெக்கன்சி 25 பந்துகளில் 69 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/sports/cricket/caribbean-premier-league-jamaica-stun-trinbago




