திருவாரூர், திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே இன்று இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. தஞ்சாவூரில் இருந்து வேளாங்கண்ணி நோக்கி சென்ற காரும், நாகப்பட்டினத்தில் இருந்து அம்மையப்பன் கிராமத்தை நோக்கி வந்த காரும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 3 வயது குழந்தை உட்பட 10 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் காயமடைந்தவர்களை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/head-on-collision-between-two-cars-in-tiruvarur-10-people-including-a-3-year-old-child-critically-injured




