கோவை, கோவையில் மனநலம் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை, 16 வயது சிறுவன் பலாத்காரம் செய்ய முயன்றபோது அவனை அந்த தெருவில் இருந்த நாய் கடித்து குதறி துரத்தி அடித்தது. கோவை மாவட்டம் துடியலூரை அடுத்த என்.ஜி.ஜி.ஓ. காலனி அருகேயுள்ள அசோகபுரம் பகுதியில் இயங்கி வந்த பெட்டிக்கடை ஒன்றிற்கு கடந்த செப்டம்பர் 2-ஆம் தேதி நள்ளிரவில் மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில், துடியலூர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். மனிதநேயமற்ற கொடூர காட்சி குற்றவாளிகளைக் கண்டறியும் முயற்சியாக, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை அதிகாரிகள் விரிவாக ஆய்வு செய்தனர். அப்போது, பெட்டிக்கடை தீ வைப்பு சம்பவத்தைத் தாண்டி, மனிதநேயமற்ற மற்றொரு கொடூரக் காட்சி கேமராவில் பதிவாகியிருப்பதைக்கண்டு காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் நள்ளிரவு நேரத்தில் சாலையோரம் மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் படுத்து உறங்கிக் கொண்டிருந்தபோது, அந்த வழியாக நடந்து வந்த நபர் ஒருவர் சிறிது நேரம் அங்கும் இங்கும் நோட்டம் விடுகிறார். சிறிது நேரம் கழித்து அந்த பெண்ணிடம் நெருங்கி பாலியல் ரீதியாக தொல்லை கொடுக்கிறார். அந்த இளம்பெண் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதையும் தெரிந்து அந்த பெண்ணை விட வில்லை. இந்த காட்சி அதில் தெளிவாகப் பதிவாகியிருந்தது. கூச்சலிட்டதும் ஓடோடி வந்த தெருநாய் பாதிக்கப்பட்ட பெண் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்ட நிலையில், அங்கு நின்றுகொண்டிருந்த தெருநாய் ஒன்று வேகமாக ஓடி வந்து அப்பெண்ணுக்கு ஆதரவாக நின்றது. அந்த நபர் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முற்பட்டபோது, கோபமடைந்த அந்தத் தெருநாய் அவரைப் பார்த்துத் தொடர்ந்து உரக்கக் குரைத்து, கடிக்கப் பாய்ந்து தாக்குதல் நடத்தியது. நாயின் கடுமையான அச்சுறுத்தலால் பயந்துபோன அந்த நபர், விட்டால் போதும் என்று துண்டு காணோம் துணியும் காணோம் என்று தலைதெறிக்க அங்கு இருந்து தப்பியோடினார். அந்தத் தெருநாய் விடாமல் அவரைத் துரத்திச் சென்ற காட்சிகளும் சிசிடிவியில் பதிவாகியிருந்தன. குற்றச்செயலில் ஈடுபட்ட 16 வயது சிறுவன் இதையடுத்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் துடியலூர் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அதில், மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்குப் பாலியல் தொல்லை அளிக்க முயன்றவர் அதே துடியலூர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. உடனடியாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அச்சிறுவனைக் கைது செய்து மேல்நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆபத்தான சூழலில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணைக் காக்கப் போராடிய தெருநாயின் விசுவாசமான செயல் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/a-young-woman-who-was-alone-was-sexually-assaulted-in-the-middle-of-the-night




