'ஸ்பைடர்மேன்: ஹோம் கம்மிங்' திரைப்படத்தின் மூலம் டாம் ஹாலண்ட் கதாநாயகனாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து 'ஸ்பைடர்மேன்: பார் ப்ரம் ஹோம்' மற்றும் 'ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்' ஆகிய திரைப்படங்கள் வெளியாகி உலகம் முழுவதும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. இந்த மூன்று திரைப்படங்களையும் ஜான் வாட்ஸ் இயக்கியிருந்தார். தற்போது, இந்த வரிசையில் நான்காவது திரைப்படமாக ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ உருவாகியுள்ளது. இப்படத்தை டெஸ்டின் டேனியல் இயக்கியுள்ளார். நட்சத்திர பட்டாளத்துடன் உருவான புதிய படம் இந்தப் படத்தில் டாம் ஹாலண்டுடன் ஸெண்டயா, ஜேக்கப் பேட்டலோன், சாடி சிங், லிசா காலோன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மார்வெல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படம், வரும் ஜூலை 31-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. பைனல் டிரெய்லர் வெளியீடு இந்த நிலையில், ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ திரைப்படத்தின் பைனல் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஹல்க் மற்றும் ஸ்பைடர் மேன் இடையேயான அதிரடி மோதல் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதனால் இந்தப் படம் ஆக்ஷன் மற்றும் உணர்ச்சிகரமான தருணங்கள் நிறைந்த மார்வெல் படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/cinema/cinemanews/final-trailer-of-spider-man-brand-new-day-released




