திருவொற்றியூர், பழவேற்காட்டைச் 5 சேர்ந்தவர் சுந்தர். இவரது மனைவி கீர்த்தி (20). நிறை மாத கர்ப்பிணியாக இருந்த கீர்த்தி ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம். அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்து வந்தார். அப்போது அடுத்த மாதம் முதல் வாரத்தில் குழந்தை பிறக்கும் என்று டாக்டர்கள் தெரிவித்து இருந்தனர். இதையடுத்து - ஆஸ்பத்திரிக்கு சென்று வர வசதியாக எண்ணூர் பஜார் பகுதியில் உள்ள அவரது அக்காள் கலைச்செல்வி என்பவர் வீட்டில் தங்கி இருந்தார். அழகான பெண் குழந்தை இந்த நிலையில் இன்று காலை 10 மணி அளவில் கீர்த்திக்கு திடீரென்று வயிற்றுவலி ஏற்பட்டது. உடனடியாக அவரை ஆட்டோவில் ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம். ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அன்னை சிவகாமி நகர் அருகே ஆட்டோ சென்று கொண்டிருந்தபோதே கீர்த்திக்கு பிரசவ வலி அதிகம் ஏற்பட்டு அழகான பெண் குழந்தை பிறந்தது. உடனடியாக அருகில் உள்ள அன்னை சிவகாமி நகர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கீர்த்தியையும், குழந்தையையும் அனுமதித்தனர். அங்கு தாய் - குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் தாயும், குழந்தையும் ஆர்.எஸ். ஆர்.எம். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு இருவரும் நலமாக உள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/childbirth-on-the-way-to-the-hospital-baby-girl-born-in-auto




