ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் ஆகியோர் நடித்திருக்கும் 'ராமாயணா' படத்தின் முதல் பாகம் இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை ரிலீஸாக வருகிறது. திட்டமிடல்களுடன் உலகமெங்கும் இப்படத்தை ரிலீஸ் செய்திடவும் படக்குழுவினர் ஆயத்தமாகி வருகிறார்கள். Ramayana Movie இந்தப் படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியிருக்கிறது. இந்தப் படத்தின் டிரெய்லர் குறித்தும், இந்தத் திரைப்படம் உருவான விதம் குறித்தும், இப்படத்தின் இயக்குநர் நிதேஷ் திவாரி பகிர்ந்திருக்கிறார். அவர், "ராமாயணம் என்பது மிகவும் மகத்தான ஒன்று. அது பிரமாண்டத்தால் மட்டுமல்ல, 'ராமாயணம்' காலத்தைக் கடந்தும் உயரிய மதிப்புகளைச் சொல்கிறது. ஒரு திரைப்படப் படைப்பாளியாக, இதை உலகளாவிய ஒன்றாக மாற்ற வேண்டும் என்ற பொறுப்பு எனக்கு எப்போதும் தோன்றியதில்லை. ஏனெனில் அது ஏற்கெனவே உலகளாவிய ஒன்றுதான். முழுமையான நேர்மையோடும், உண்மைத்தன்மையோடும், பேரன்பு மற்றும் மரியாதையோடும் அணுகுவதே எனது பொறுப்பாக இருந்தது. எழுத்து, நடிகர்களின் பங்களிப்பு, கலை, இயக்கம், இசை, கிராபிக்ஸ் என இந்த மகத்தான பாரம்பர்யத்தை அதற்குரிய கண்ணியத்தோடும் மரியாதையோடும் சமர்ப்பிக்க வேண்டும் என்பதே எங்களின் விருப்பமாக இருந்தது. Nitesh Tiwari இந்தத் தொலைநோக்குப் பார்வையைத் திரையில் நிஜமாக்க, உலகின் மிகச்சிறந்த கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் கதையாசிரியர்களுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறோம். இது என் வாழ்நாளில் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம். உலகம் முழுவதிலும் உள்ள பார்வையாளர்கள் ராமாயணத்தின் பிரமாண்டத்தை மட்டுமல்லாமல், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அதை நிலைத்திருக்கச் செய்த அதன் உணர்ச்சிகளையும், மனிதநேயத்தையும், காலத்தால் அழியாத ஆன்மாவையும் உணர்வார்கள் என்று நம்புகிறேன்" எனப் பகிர்ந்திருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://cinema.vikatan.com/bollywood/nitesh-tiwari-opens-up-about-ranbir-kapoor-sai-pallavi-ramayana-trailer




