தர்மபுரி, தர்மபுரி ரெயில் நிலையத்தில் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே பலியானான். தர்மபுரி ரெயில் நிலையம் தர்மபுரி மாவட்டம் பைசுஅள்ளியைச் சேர்ந்த முனியப்பன் (வயது 34), மகன் யாசிரியன்(7) ஆகியோர், உறவினர்களை கேரளா கோவிலுக்கு வழியனுப்ப தர்மபுரி ரெயில் நிலையம் வந்தனர். பெங்களூரு-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி, உறவினர்களை வழியனுப்பினர். தவறி விழுந்து 7 வயது சிறுவன் பலி அப்போது ரெயில் கிளம்பியதும் மகனை தூக்கிக்கொண்டு இறங்க முயன்ற முனியப்பன், சிறுவனுடன் ரெயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே தவறி விழுந்தார். இதில் யாசிரியன் உடல் துண்டாகி உயிரிழந்தான். படுகாயமடைந்த முனியப்பன் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/dharmapuri-boy-dies-after-falling-from-train



