பெங்களூரு கர்நாடகாவில் விலங்கு கடத்தல்காரர்கள் மற்றும் அதிகாரிகள் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலியாகி உள்ளனர். கர்நாடகாவின் சாமராஜ்நகர் மாவட்டத்தின் ஹானூர் தாலுகாவில் உள்ள காவிரி வனவிலங்கு சரணாலயத்தில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். 3 பேர் பலி அப்போது, விலங்கு கடத்தல்காரர்கள் 4 பேர் அந்த பகுதிகளில் இருந்துள்ளனர். அவர்கள் 4 பேரும் மான் ஒன்றை வேட்டையாடி விட்டு, அதிகாரிகளை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு தப்பித்து செல்ல முயன்றனர். அவர்கள் வன அதிகாரி சிவராஜ் என்பவரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில், அவர் காயமடைந்து உள்ளார். அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அப்போது அதிகாரிகளும் பதிலுக்கு துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 3 பேர் உயிரிழந்தனர். ஒருவர் தப்பி விட்டார். அவரை தேடும் முயற்சி நடந்து வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/karnataka-animal-smugglers-officials-gunfight-3-killed




